For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா எனக்கு எல்லாத்தையும் கொடுத்துருக்கு... இங்க நிலைமை சீக்கிரத்துலயே மாறும்... போல்ட் நம்பிக்கை

ஆக்லாந்து : நியூசிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இன்றைய தினம் தனது நாட்டிற்கு சென்றுள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. தினந்தோறும் 3 லட்சம் பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.

அந்த தப்ப பண்ணல.. தோனியின் கேப்டன்சி அப்படி இருந்தது.. புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்! அந்த தப்ப பண்ணல.. தோனியின் கேப்டன்சி அப்படி இருந்தது.. புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்!

இந்நிலையில் இந்தியாவின் தற்போதைய நிலை மாறி இயல்புநிலை திரும்பும் என்று ட்ரெண்ட் போல்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம் ஆக்லாந்திற்கு திரும்பியுள்ளார்.

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

ஒத்திவைக்கப்பட்ட தொடர்

தொடர்ந்த கொரோனா பாதிப்புகளை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை ஐபிஎல் 2021 தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்களது வீடுகளுக்கும் நாடுகளுக்கும் திரும்பியுள்ளனர். இன்றைய தினம் ஒரு சில வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

நியூசிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் வீரர் ட்ரெண்ட் போல்ட் ஆக்லாந்திற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட மற்றும் உருக்கமான பதிவினை பகிர்ந்துள்ளார். அதில் இந்தியா மற்றும் அதன் ரசிகர்கள் தனக்கு ஒரு மனிதனாகவும் கிரிக்கெட் வீரராகவும் எல்லாவற்றையும் கொடுத்துள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

விரைவில் மாறும்

விரைவில் மாறும்

இந்திய ரசிகர்களிடம் இருந்து எப்போதும் தனக்கு கிடைக்கும் ஆதரவு பாராட்டுக்குரியது என்றும் இந்தியாவின் நெருக்கடியான இந்த சூழல் விரைவில் மாறும் என்றும் போல்ட் மேலும் கூறியுள்ளார். தான் இந்த அழகான நாட்டிற்கு மீண்டும் திரும்பி வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்சுக்கு நன்றி

மும்பை இந்தியன்சுக்கு நன்றி

ஐபிஎல்லின்போது ஒவ்வொரு வீரரின் பாதுகாப்பு மற்றும் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் அவர் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்களை சிறப்பாக பார்த்துக் கொள்ளவும் மற்றவருக்கு ஆதரவாக செயல்படவும் வலிமையாக இருக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Story first published: Sunday, May 9, 2021, 18:32 [IST]
Other articles published on May 9, 2021
English summary
My heart goes out to the people of the India -Trent Boult
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X