For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே.. 'ஒன்டே' ரேங்கில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த மூன்று வாரங்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது சவுத் ஆப்ரிக்கா அணியிடம் அந்த இடத்தைப் பறிகொடுத்துள்ளது.

By Shyamsundar

டெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் கடந்த மூன்று வாரங்களாக முதலிடத்தில் இருந்த இந்திய அணி தற்போது சவுத் ஆப்ரிக்கா அணியிடம் அந்த இடத்தைப் பறிகொடுத்துள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணி முதல் இடத்தை பிடித்து இருந்ததபோதிலும் இப்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்திய அணியை விட அதிக புள்ளிகள் பெற்று தற்போது தென் ஆப்பிரிக்கா அணியே தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இடத்தில் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்த அணியை விட 251 புள்ளிகள் தரவரிசையில் அதிகமாக பெற்றுள்ளதாக ஐசிசி பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

 இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்

இந்தியா- ஆஸ்திரேலியா தொடர்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. டி-20 தொடரானது ஒரு ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியின் விளையாட்டு அனைவராலும் பாராட்டப்பட்டது.

 இந்திய அணி முதல் இடம்

இந்திய அணி முதல் இடம்

இந்த நிலையில் இந்தத் தொடரில் 4-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்தது. ஏற்கனவே டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி ஒருநாள் தரவரிசையில் முதல் திட்டத்திற்கு வந்ததால் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கு முன் முதலிடத்ததில் இருந்த சவுத் ஆப்ரிக்கா அணியை இரண்டாம் இடத்திற்கு அனுப்பி இந்தியா முதல் இடம் வந்தது குறிப்பிடத்தக்கது

 வங்கதேசத்திற்கு எதிரான தொடர்

வங்கதேசத்திற்கு எதிரான தொடர்

இந்த நிலையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட தென் ஆப்பிரிக்கா அணி வங்கதேசம் அணியுடன் ஒருநாள் தொடர் விளையாடிக் கொண்டிருக்கிறது. சவுத் ஆப்ரிக்காவில் நடக்கும் இந்தத் தொடரில் அந்த அணி மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பங்களாதேஷுடன் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி வென்றிருந்தது. அதன்பின் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இரண்டு போட்டிகளில் வென்றுள்ளது.

 இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சவுத் ஆப்ரிக்கா

இந்தியாவை பின்னுக்கு தள்ளிய சவுத் ஆப்ரிக்கா

இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 104 வித்தியாசத்தில் சவுத் ஆப்ரிக்கா அணி வங்கதேச அணியை எளிமையாக வென்றது. இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி காரணமாக ஐசிசி ஒருநாள் தரவரிசை புள்ளி பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி அதிக புள்ளிகளைப் பெற்றது. இதன் மூலம் மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 இந்திய முதல் இடம் வருமா

இந்திய முதல் இடம் வருமா

தரவரிசையில் தற்போது முதலிடத்ததில் உள்ள தென் ஆப்பிரிக்கா அணி 6244 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய அணி 5993 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணி மீண்டும் ஐசிசி தரவரிசையில் முதல் இடம் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது ஒருநாள் போட்டியை பங்களாதேஷுடன் வெல்லும்பட்சத்தில் இன்னும் அதிக புள்ளிகள் பெறும். இதை ஈடுகட்டும் வகையில் இந்திய அணி நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடினால் மீண்டும் முதலிடத்தை பெறலாம்.

Story first published: Friday, October 20, 2017, 10:39 [IST]
Other articles published on Oct 20, 2017
English summary
India loses its top ODI position to South Africa.India lost its rank to South Africa following the huge win over Bangladesh in the second ODI.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X