
திணறிய இங்கிலாந்து
அதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 180 ரன்களுக்கு சுருண்டது.

பரிதாப நிலையில் இங்கி
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது. கடைசி கட்டத்தில் வந்த சாம் குர்ரான் நிலைத்து நின்று 63 ரன்கள் எடுத்தார். ஜானி பிரிஸ்டோ 28, டேவிட் மாலன் 20 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் வந்த வேகத்தில் திரும்பினர்.

இஷாந்த் கலக்கல்
இந்திய பவுலர்கள் நேற்றைய ஆட்டத்தில் அசத்தலாக பந்து வீசினர். இஷாந்த் சர்மா 13 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை துவக்கியது. முரளி விஜய் 6, ஷிகார் தவன் 13, லோகேஷ் ராகுல் 13, ரஹானே 2 என முதல் நிலை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3ம் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.

1000மாவது போட்டியில் வெற்றி
நான்காம் நாளான இன்று, ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே 20 ரன்களுக்கு தினேஷ் கார்த்திக், 51 ரன்களுக்கு விராட் கோஹ்லி ஆட்டமிழந்தனர். ஹார்திக் பாண்டயா போராடி இறுதியில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் இந்தியா 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் 31 ரன்களில் இங்கிலாந்து அபார வெற்று பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.