இந்தியாவின் பிராட்மேன் கெத்து… பாகிஸ்தானுக்கு கொத்து’

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
ஷப்னம் கில் அதிரடி, பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இந்தியா- வீடியோ

டெல்லி: பிராட்மேனின் பேட்டிங் சராசரியை முறியடித்த இந்தியாவின் பிராட்மேனான ஷப்னம் கில் அதிரடி ஆட்டத்தால், 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை அரை இறுதியில், பாகிஸ்தான் அணியை கொத்து பரோட்டா செய்தது இந்தியா அணி.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை நியூசிலாந்தில் நடக்கிறது. அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை வென்று, மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியா ஏற்கனவே பைனலுக்கு முன்னேறியுள்ளது.

India overpowered Pakistan

இன்று நடந்த மற்றொரு அரை இறுதியில் மூன்று முறை சாம்பியனான இந்தியா, பரமவைரியான பாகிஸ்தானுடன் மோதியது.

முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் 11வது சீசனுக்கு கோல்கக்தா நைட் ரைடர்ஸ் அணியால், ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஷப்னம் கில்.

நடப்பு உலகக் கோப்பையில், ஒருதினப் போட்டியில் 1,000 ரன்களைக் கடந்தவர்களில் அதிக பேட்டிங் சராசரி உள்ள டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த கில்லின் பேட்டிங் சராசரி 101.60 சதவீதம்.

இன்று நடந்த ஆட்டத்தில் 93 பந்துகளில், 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த உலகக் கோப்பையில் 170 சராசரியுடன் 341 ரன்கள் குவித்துள்ளார். மனோஜ் கால்ரா 47 ரன்கள் குவித்தார். பாகிஸ்தானின் முகமது மூசா 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இஷான் போரல் 4 விக்கெட்களும், ரியான் பராக் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதன் மூலம், ராகுல் டிராவிட் பயிற்சி அளிக்கும் இந்திய அணி, 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடுத்ததாக பைனலில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்க உள்ளது.

Story first published: Tuesday, January 30, 2018, 14:24 [IST]
Other articles published on Jan 30, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற