முதல் டி-20 போட்டி.. 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

Posted By:
டி20 போட்டியிலும் தென் ஆப்ரிக்காவை கலங்கடித்த இந்தியா- வீடியோ

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இதில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பவுலிங் ஆர்டரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20ல் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பவுலிங் தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என இழந்தது. 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 5-1 என இந்தியா கைப்பற்றியது. இந்த நிலையில் தற்போது 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கி இருக்கிறது.

பவுலிங்

பவுலிங்

இந்திய அணி இந்த முறை வேகப்பந்து வீச்சை நம்பி களம் இறங்கியுள்ளது. குல்தீப் யாதாவிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஐபிஎல் புயல் ஜெயதேவ் உனட்கட் அணியில் சேர்ந்துள்ளார்.

மீண்டும் வந்த குட்டி தல

அதேபோல் அணியில் ரெய்னா மீண்டும் விளையாடுகிறார்கள். அவர் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் இவர் யோயோ டெஸ்டில் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வெற்றி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20ல் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Story first published: Sunday, February 18, 2018, 18:04 [IST]
Other articles published on Feb 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற