பார்மிற்கு திரும்பிய ரோஹித்.. முரண்டு பிடித்த தென்னாப்பிரிக்கா.. இமாலய இலக்கு நிர்ணயம்!

Posted By:
5வது ஒருநாள் போட்டி...களம் இறங்கிய இந்திய அணி...வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் நடக்கிறது. இதில் இந்தியா முதலில் பேட்டிங் செய்துள்ளது.

பேட்டிங்

பேட்டிங்

இரண்டு அணியிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்தியா முதலில் பேட்டிங் இறங்கியது .

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

இதில் ரோஹித் மீண்டும் பார்மிற்கு திரும்பினார். அதிரடியாக 126 பந்தில் 115 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயஸ் ஐயர், கோஹ்லி தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார்கள். கோஹ்லி 36 ரன்னிலும், தவான் 34 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டர்

இந்திய அணியின் பேட்டிங்கில் மிடில் ஆர்டர் மீண்டும் சொதப்பியது. பாண்டியா 0 ரன்னில் அவுட் ஆனார். ஷ்ரேயஸ் ஐயர் 30 ரன் எடுத்தார். ரஹானே 8 ரன்னில் அவுட் ஆனார். டோணி 13 ரன்னில் அவுட் ஆனார்.

எத்தனை இலக்கு

எத்தனை இலக்கு

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா 274 ரன்கள் எடுத்தது. 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து இந்தியா 274 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 275 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, February 13, 2018, 15:10 [IST]
Other articles published on Feb 13, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற