கடைசி ஒருநாள் போட்டி.. இந்திய பவுலிங்கில் சுருண்ட தென்னாப்பிரிக்கா.. சொற்ப ரன்களில் அவுட்!

Posted By:
கடைசி ஒருநாள் போட்டி...வெற்றியோடு முடிக்க இந்தியா திட்டம்- வீடியோ

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது.
ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது.

டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி மோசமாக விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது.

ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்காவிற்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை. இன்றைய போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணி சொற்ப ரன்களில் அவுட் ஆகி இருக்கிறது.

வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி

இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளை இந்தியா மிகவும் எளிதாக வென்றது. ஆனால் நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டு வந்து வெற்றி பெற்றது. மீண்டும் கடைசி போட்டியில் மீண்டும் இந்திய அணி மீண்டது. எளிதாக அந்த போட்டியை வென்று தொடரை முதல்முறையாக இந்தியா கைப்பற்றியது.

மாற்றம்

இந்த நிலையில் கடைசி போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று இதுவரை அணியில் இடம் கிடைக்காத ஆட்களுக்கு இன்று அணியில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷரத்துல் தாக்குர் சேர்க்கப்பட்டார்.

பவுலிங்கில் சுருண்டது

தென்னாப்பிரிக்க அணி இந்த முறையும் இந்திய பவுலிங்கில் சுருண்டது. ஆனால் இந்த முறை இந்திய வேகப்பந்தில் சுருண்டுள்ளது. ஷரத்துல் தாக்குர் வாய்ப்பை பயன்படுத்தி 4 விக்கெட் எடுத்தார். சாஹல், பும்ரா 2 விக்கெட் எடுத்தனர். பாண்டியா, குல்தீப் 1 விக்கெட் எடுத்தனர்.

எளிமையான இலக்கு

எளிமையான இலக்கு

இதனால் 6வது ஒருநாள் போட்டியில் 204 ரன்னுக்கு தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.46.5 ஓவரில் தென்னாப்பிரிக்கா அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இந்திய அணிக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த அணியில் காயா சொன்டா மட்டும் அதிகமாக 54 ரன்கள் எடுத்தார்.

Story first published: Friday, February 16, 2018, 15:38 [IST]
Other articles published on Feb 16, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற