யாருப்பா இந்த இளம் புயல்? இப்ப தான் வந்தாரு.. அதுக்குள்ள.. மீண்டும் வாயைப் பிளந்த கிரிக்கெட் உலகம்!

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட மகளிர் டி20 பேட்ஸ்வுமன் தரவரிசையில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார் இந்தியாவின் ஷபாலி வர்மா.

Shafali Verma becomes no.1 T20 batswoman| ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த இளம் வீராங்கனை

16 வயதே ஆன இளம் வீராங்கனை ஷபாலி வர்மா, 18 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் முதல் இடத்தை பிடித்து அசர வைக்கும் சாதனையை செய்துள்ளார்.

தற்போது நடந்து வரும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரிலும் அதிக ஸ்ட்ரைக் ரெட்டில், அதிக ரன் குவித்து சாதனை செய்துள்ளார்.

16 வயது இளம் புயல்

16 வயது இளம் புயல்

இந்திய அணியில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம், 15 வயதிலேயே அடி எடுத்து வைத்தார் ஷபாலி வர்மா. அப்போதே அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. மகளிர் கிரிக்கெட் பயிற்சி மையங்கள் அதிகம் இல்லாத நிலையில், ஆண்கள் போல முடியை வெட்டிக் கொண்டு, சிறுவர்களுடன் கிரிக்கெட் பயிற்சி பெற்று, கடுமையான பாதையைக் கடந்து இந்திய அணியில் இடம் பெற்றார்.

இந்திய அணியின் நட்சத்திரம்

இந்திய அணியின் நட்சத்திரம்

மிகச் சில போட்டிகளிலேயே தன் அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். துவக்க வீராங்கனையாக இதுவரை 18 டி20 போட்டிகள் ஆடி இரண்டு அரைசதம் அடித்துள்ளார். 485 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 28.52 ஆக உள்ளது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அவரது சிறப்பே இந்திய அணிக்கு அதிரடி துவக்கம் அளிப்பது தான். 18 டி20 போட்டிகளின் முடிவில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 146.96 ஆக உள்ளது. சிக்ஸர்கள் அடிப்பதிலும் முன்னணியில் இருக்கிறார். இதுவரை 21 சிக்ஸர்கள் அடித்து விட்டார்.

உலகக்கோப்பை ஆட்டம் எப்படி?

உலகக்கோப்பை ஆட்டம் எப்படி?

தற்போது நடந்து வரும் 2020 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் லீக் சுற்றில் நான்கு போட்டிகளில் 161 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இந்திய அணியில் அதிக ரன்கள் குவித்தவர் இவர் மட்டுமே.

அதிக ஸ்ட்ரைக் ரேட் சாதனை

அதிக ஸ்ட்ரைக் ரேட் சாதனை

இந்த உலகக்கோப்பை தொடரில் 9 சிக்ஸ் அடித்து அதிக சிக்ஸர் அடித்தவராகவும் இருக்கும் ஷபாலி வர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் 161 ஆகும். இது உலகக்கோப்பை தொடரில் மிக அதிக ஸ்ட்ரைக் ரேட் ஆகும். மற்ற இந்திய வீராங்கனைகளால் ஷபாலிக்கு ஈடு கொடுத்து ரன் குவிக்க முடியவில்லை என்பதே உண்மை.

இவரால் மாறும்

இவரால் மாறும்

தொடர்ந்து அதிரடி ஆட்டம் ஆடும் ஷபாலி வர்மா, மகளிர் கிரிக்கெட்டின் சேவாக் என பலரும் பாராட்டி வருகின்றனர். இவரது அதிரடியால் ரசிகர்கள் இனி மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கும் அதிக அளவில் வருவார்கள் என பல விமர்சகர்களும் பாராட்டி வருகின்றனர்.

தரவரிசையில் முதல் இடம்

தரவரிசையில் முதல் இடம்

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் ஐசிசி தரவரிசை வெளியாகி உள்ளது. அதில் பேட்டிங் தரவரிசையில் உலக அளவில் முதல் இடத்தை பிடித்து மிரள வைத்துள்ளார் ஷபாலி வர்மா. நியூசிலாந்து அணியின் சூசி பேட்ஸ்-ஐ பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிதாலி ராஜ்-க்குப் பின்..

மிதாலி ராஜ்-க்குப் பின்..

16 வயதே ஆன இளம் வீராங்கனை ஒருவர் 18 போட்டிகள் மட்டுமே ஆடிய நிலையில் முதல் இடத்தை பிடித்துள்ளது கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மிதாலி ராஜ்-க்குப் பின் டி20 பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் செய்துள்ளார் ஷபாலி.

மற்ற வீராங்கனைகள்

மற்ற வீராங்கனைகள்

மற்ற இந்திய வீராங்கனைகள் உலகக்கோப்பை தொடரில் சுமாராக ஆடி வரும் நிலையில் தங்கள் இடத்தை இழந்துள்ளனர். ஸ்மிருதி மந்தனா நான்காம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கும், ஜெமிமா ரோட்ரீகஸ் ஏழாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கும் சரிந்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Shafali Verma becomes no.1 T20 batswoman. She scored 161 runs in 4 innings in the T20 World cup.
Story first published: Wednesday, March 4, 2020, 12:48 [IST]
Other articles published on Mar 4, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X