For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிங்கம் போல் பாய்ந்த ரோகித், சுப்மான்.. தடுமாறிய நடுவரிசை.. இறுதியில் ஹர்திக் ஸ்பெஷல்.. இமாலய இலக்கு

இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 386 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி தொடக்க வீரர்களான ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் சதம் விளாசினர்.

இந்த தொடரை முழுமையாக வென்றால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதல் இடம் பிடித்துவிடும். இந்தூரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து பந்துவீசியது.

மைதானத்தின் ஒரு பகுதி 53 மீட்டரும், 63 மீட்டரும் தான் இருந்ததால் இன்றைய ஆட்டத்தில் ரன்கள் விருந்து தான் ரசிகர்களுக்கு கிடைத்தது.

அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு அவங்க நாடு மீது தான் விஸ்வாசம் இருக்கும்.. இந்தியா தோற்றதுக்கு காரணமே அது தான்.. கவாஸ்கர் தாக்கு

அபார தொடக்கம்

அபார தொடக்கம்

முதலில் பேட்டிங்கை செய்த இந்திய வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். . முதல் 10 ஓவரிலேயே இந்திய அணி 82 ரன்கள குவித்தது. சுப்மான் கில் 2 சிக்சர்களை பறக்கவிட்டு 33 பந்துகளில் எல்லாம் அரைசதத்தை பூர்த்தி செய்தார். மறுபுறம் ரோகித் 41 பந்தில் 50 ரன்களை பூர்த்தி செய்தார்.தொடர்ந்து அதிரடியை காட்டிய இந்த ஜோடி, கிடைக்கும் வாய்ப்பை பவுண்டரிக்கு விரட்டினர்.

அடுத்தடுத்து சதம்

அடுத்தடுத்து சதம்

ரோகித் சர்மா 6 சிக்சர்கள், 9 பவுண்டரிகளை விளாசி 83 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 16 மாதங்களுக்கு பிறகு சதத்தை பூர்த்தி செய்தார்.எனினும் ரோகித் 101 ரன்னில் பிராஸ்வெல் பந்தில் சதம் போல்ட் ஆனார். எனினும் சுப்மான் கில் அதிரடியை காட்டி 72 பந்தில் சதம் விளாசினார்.இதில் 13 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். சுப்மான் கில் 112 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

நடுவரிசை

நடுவரிசை

இதனையடுத்து இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க இந்தியாவின் இன்னிங்ஸ் சரிவை கண்டது. இஷான் கிஷன் 17 ரன்களில் ரன் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 36 ரன்களில் பெவிலியன் திரும்பினார். சிறிய மைதானத்தில் ரசிகர்களுக்கு சூர்ய குமார் யாதவ் வாண வேடிக்கை காட்டுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் 14 ரன்களில் வெளியேறினார்.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

இதனையடுத்து வாசிங்டன் சுந்தர் 9 ரன்கள் மட்டுமே சேர்க்க, ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்த ஷர்துல் தாக்கூர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஷர்துல் தன் பங்கிற்கு 25 ரன்கள் சேர்க்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா 3 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் 36 பந்தில் ஹர்திக் 54 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

Story first published: Tuesday, January 24, 2023, 17:36 [IST]
Other articles published on Jan 24, 2023
English summary
India set 386 runs target to whitewash NZ in 3rd odi சிங்கம் போல் பாய்ந்த ரோகித், சுப்மான்.. தடுமாறிய நடுவரிசை.. இறுதியில் ஹர்திக் ஸ்பெஷல்.. இமாலய இலக்கு
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X