
கெய்ல் மாதிரி அதிரடி
சோல் டிரையான், கிறிஸ் கெயில் மாதிரி அதிரடி காட்டினார். வெறும் 7 பந்துகளில் அவர் 32 ரன்கள் எடுத்தார். அதில் நான்கு சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகள் அடங்கும். அதில் ஷிகா பாண்டே வீசிய ஓவரில் மட்டும், 3 சிக்சர், ஒரு பவுண்டரி என 23 ரன்கள் எடுத்தார். ஓப்பனர் டேன் வான் நீகெர்க் 38 ரன்கள் எடுத்தார். மிக்னான் டூபிரீஸ் 27 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அனுஜா படேல் 2 விக்கெட்டை வீழ்த்தினார். காயம் காரணமாக சீனியரான ஜூலான் கோஸ்வாமி இந்தத் தொடரில் இருந்து விலகிக் கொண்டார்.

ஓவருக்கு 8 ரன்னுக்கு மேல் அடிக்கணும்
165 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய மகளிர் களமிறங்கினர். நீங்க அடிச்சா மட்டும்தான் பந்து பறக்குமா. எங்களுடைய ஆட்டத்தையும் கொஞ்சம் பாருங்க என்று இந்திய வீராங்கனைகள் துவக்கத்தில் இருந்தே அதிரடி காட்டினர்.

அதிரடிதான் மச்சான், மச்சானே
மிதாலி ராஜ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்தார். இது அவருடைய 11வது அரைசதமாகும். 48 பந்துகளை சந்தித்த மிதாலி ராஜ், ஒரு சிக்சர், ஆறு பவுண்டரிகள் அடித்தார்.

போட்டி போட்ட சீனியரும் ஜூனியரும்
கேப்டன் அடிக்கும்போது நாமும் சும்மா இருக்கக் கூடாது என்ற மற்றவர்களும் தங்களுடைய திறமையை காட்டினர். மும்பையைச் சேர்ந்த 17 வயதாகும் சின்ன பெண் ஜெமிமா ரோட்ரிகுஸ் 37 ரன்கள் எடுத்தார். 27 பந்துகளில் அவர் ஒரு சிக்சர், நான்கு பவுண்டரிகள் விளாசினார்.

சின்னப் பொண்ணே அடிக்குது
சின்னப் பொண்ணே அடிக்கும்போது, சீனியரான வேதா கிருஷ்ணமூர்த்தி சும்மா இருப்பாரா. 22 பந்துகளில், ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் குவித்தார். அதில் மூன்று பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் அடங்கும். முன்னதாக ஓப்பனர் ஸ்மிருதி மந்தானா 28 ரன்களை எடுத்தார்.


Click it and Unblock the Notifications












