For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வங்கதேசத்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.. காயத்திலிருந்து திரும்பினார் ஜடேஜா.. முழு அணி விவரம்

மும்பை: வரும் டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலிஇ ராகுல் ஆகியோர் இந்த தொடருக்கு திருடமபியுள்ளனர்.

நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்துள்ள சஞ்சு சாம்சன்,உம்ரான் மாலிக் ஆகியோருக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதே போன்று ருத்துராஜ், பிரித்வி ஷா ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.

வங்கதேசத்துக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஆப்கானிஸ்தான் வெற்றி தொடருமா? செம போட்டி இன்றுவங்கதேசத்துக்கு காத்திருக்கும் ஆபத்து.. ஆப்கானிஸ்தான் வெற்றி தொடருமா? செம போட்டி இன்று

ஜடேஜா திரும்பினார்

ஜடேஜா திரும்பினார்

வங்கதேச ஒருநாள் அணியில் கேப்டனாக ரோகித் சர்மா வழக்கம் போல் தொடர்கிறார். ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் ஷிகர் தவான், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் போன்ற நட்சத்திர வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாஷ் தயால் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. ஜடேஜாவும் காயத்திலிருந்து அணிக்கு திரும்பியுள்ளார்.

ரஹானே இல்லை

ரஹானே இல்லை

இதே போன்று வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி வரும் 14 மற்றும் 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ரோகித், ராகுல், புஜாரா, கோலி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த தொடரில் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரிஷப் பண்ட் உடன் கூடுதல் விக்கெட் கீப்பராக கேஎஸ் பரத் சேர்க்கப்பட்டுள்ளார். முகமது ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் போட்டி அணியில் இடம்பிடித்துள்ளனர்.

வங்கதேசம் Vs இந்திய ஒருநாள் அணி

வங்கதேசம் Vs இந்திய ஒருநாள் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல்(துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜட் பட்டிதார், ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், யாஷ் தயால்

இந்திய டெஸ்ட் அணி

இந்திய டெஸ்ட் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல்(துணை கேப்டன்), விராட் கோலி,சுப்மான் கில், புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎஸ் பரத், அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ்

Story first published: Monday, October 31, 2022, 19:48 [IST]
Other articles published on Oct 31, 2022
English summary
India test and odi squad announced for Bangladesh tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X