For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பரவாயில்ல.. கோரிக்கையை ஏத்துக்கிறோம்… பிசிசிஐயிடம் சொன்ன மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

இங்கிலாந்து மற்றும் வேல்சில் வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடர் முடிவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் சென்று விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது, இந்த சுற்றுப்பயணம் 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப் பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 வாரங்களுக்கு தொடரை ஒத்திவைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், மேற்கிந்திய தீவுகள் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

அம்பயர்களே.. நேரத்தை வீணாக்காம.. இப்படி பண்ணி இருக்கலாமே! முன்னாள் வீரர் சொன்ன பலே ஐடியா!! அம்பயர்களே.. நேரத்தை வீணாக்காம.. இப்படி பண்ணி இருக்கலாமே! முன்னாள் வீரர் சொன்ன பலே ஐடியா!!

கோரிக்கை ஏற்பு

கோரிக்கை ஏற்பு

அந்த கோரிக்கையை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டு உள்ளது. அநேகமாக இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும் என கூறப்படுகிறது.

பிசிசிஐ என்ன சொல்கிறது

பிசிசிஐ என்ன சொல்கிறது

இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளுடன் டி20 போட்டிகளும் இடம்பெற உள்ளன. அத்துடன் 3 நாட்கள் கொண்ட ஒரு பயிற்சி போட்டியையும் சேர்க்கும்படி பிசிசிஐ கூறியுள்ளது.

அட்டவணையில் மாற்றம்

அட்டவணையில் மாற்றம்

எனவே, இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்ப மேற்கிந்திய தீவுகள் வாரியமும் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதாவது ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்க உள்ள கரீபியன் பிரிமியர் லீக் போட்டிக்கான அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும்.

நிர்வாகிகள் கூட்டம்

நிர்வாகிகள் கூட்டம்

அதே நேரத்தில் வரும் 13ம் தேதி நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், இந்திய அணியின் சுற்றுப்பயண நாட்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அவகாசம்

அவகாசம்

இங்கிலாந்திலும், வேல்ஸ் நகரத்திலும் இந்த ஆண்டு மே 30 முதல் நடைபெற உள்ள உலக கோப்பையில் பங்குபெறும் 10 நாடுகளை சேர்ந்த 150 கிரிக்கெட் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியில் மாற்றங்களை செய்ய மே 23ம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.

Story first published: Wednesday, May 1, 2019, 22:13 [IST]
Other articles published on May 1, 2019
English summary
India tour of West Indies likely from first week of august.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X