கோலி, டிவில்லியர்ஸ், கங்குலி வரிசையில் ரோஹித் சர்மா.. ரன் குவிப்பில் புதிய உச்சத்தை எட்டினார்!

டெல்லி: இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் அரங்கில் 8000 ரன்கள் என்ற மைல்கல் சாதனையை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நிகழ்த்தி உள்ளார்.

இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம் தான் உலகின் முக்கிய பேட்ஸ்மேன்களுள் ஒருவர் என நிரூபிக்கும் வகையில் பல சாதனைகளை செய்துள்ளார் ரோஹித் சர்மா.

பும்ரா! அந்த 9வது ஓவரை இப்படி பண்ணிட்டீங்களே! இருந்தாலும் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை!

அரைசதம்

அரைசதம்

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்தார் ரோஹித் சர்மா. இந்த போட்டியில் 46 ரன்கள் அடித்தால் 8,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என கூறப்பட்ட நிலையில், 56 ரன்கள் சேர்த்தார் ரோஹித்.

அட்டகாசமான பார்ம்

அட்டகாசமான பார்ம்

கடந்த போட்டியிலும் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 95 ரன்கள் குவித்தார். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மீண்டும் அரைசதம் அடித்து அட்டகாசமான பார்மில் இருப்பதை உணர்த்தியுள்ளார். இந்திய அளவில் மிகச் சில வீரர்களே 8,000 ரன்களை எட்டியுள்ளனர்.

ஒன்பதாவது வீரர்

ஒன்பதாவது வீரர்

இந்திய அளவில் 8,000 ஒருநாள் ரன்களை கடந்த ஒன்பதாவது வீரர் ரோஹித் சர்மா ஆவார். இதற்கு முன், முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக், யுவராஜ் சிங், தோனி, கோலி ஆகிய வீரர்கள் மட்டுமே இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

கங்குலியுடன் ரோஹித்

கங்குலியுடன் ரோஹித்

மேலும், சர்வதேச அளவில் மிக விரைவாக 8,000 ரன்களை எட்டிய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தை கங்குலியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார் ரோஹித் சர்மா. இவர்கள் இருவரும் 200 இன்னிங்க்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்னர்.

முதல் இரண்டு இடங்கள்

முதல் இரண்டு இடங்கள்

மிக விரைவாக 8,000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்தியாவின் விராட் கோலி (175 இன்னிங்க்ஸ்) மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (182 இன்னிங்க்ஸ்) உள்ளனர்.

இந்திய பேட்டிங்

இந்திய பேட்டிங்

ரோஹித் சர்மா சாதனை செய்த போதும் இந்திய அணி ஐந்தாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் சரியாக ஆடவில்லை. ஆஸ்திரேலியா நிர்ணயித்த 272 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, 29வது ஓவரிலேயே 6 விக்கெட்களை இழந்தது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
India vs Australia 5th ODI : Rohit Sharma crossed 8000 runs in ODI
Story first published: Wednesday, March 13, 2019, 20:54 [IST]
Other articles published on Mar 13, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X