இந்தியா - மேற்கிந்திய தீவுகள் 3வது சர்வதேச ஒருநாள் போட்டி

INDvsWI 3rd Odi| இந்த வருடத்தின் இறுதி தொடரை வெற்றியோடு முடிக்க இந்தியா திட்டம்

கட்டாக் : இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான 3வது மற்றும் இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி கட்டாக்கில் இன்று மதியம் 1.30 மணிக்கு துவங்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தொடரை கைப்பற்ற முடியும்.

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய 9 தொடர்களை தொடர்ச்சியாக வெற்றி கொண்டுள்ள இந்திய அணி, இந்த போட்டியில் வென்றால் தொடர்ந்து 10வது வெற்றியை பெறும்.

சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்

சர்வதேச ஒருநாள் போட்டி தொடர்

இந்தியாவில் மேற்கிந்திய தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், சர்வதேச டி20 தொடரை இந்தியாவிடம் 3க்கு 1 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையில் சர்வதேச ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது

கட்டாக்கில் இன்று நடைபெறுகிறது

சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், கட்டாக்கில் இன்று 3வது மற்றும் இறுதி போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இன்று மதியம் 1.30 மணியளவில் துவங்கவுள்ளது.

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதிய 9 தொடர்களை இந்தியா தொடர்ச்சியாக வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் இந்த தொடரை கைகொள்வதன்மூலம் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அந்த அணியுடனான 10வது தொடரை வெற்றி கொண்ட சாதனையை இந்தியா நிகழ்த்தும்.

நவ்தீப் சாய்னி சேர்ப்பு

நவ்தீப் சாய்னி சேர்ப்பு

கடந்த இரு போட்டிகளில் அணியில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 3வது போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் வீரர் நவ்தீப் சாய்னி சேர்க்கப்பட்டுள்ளார்.

2வது போட்டியில் விக்கெட் எடுத்த இளம்வீரர்

2வது போட்டியில் விக்கெட் எடுத்த இளம்வீரர்

காயம் காரணமாக ஏற்கனவே பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 2வது போட்டியில் களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்கூர், மேற்கிந்திய தீவுகளின் முதல் விக்கெட்டை கைப்பற்றினார்.

ஸ்ரேயாஸ் ஐயர், பந்த் நம்பிக்கை

ஸ்ரேயாஸ் ஐயர், பந்த் நம்பிக்கை

கடந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 4வதாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்துடன் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் கலக்கினார்.

நம்பிக்கை தரும் ஸ்ரேயாஸ் ஐயர், பந்த்

நம்பிக்கை தரும் ஸ்ரேயாஸ் ஐயர், பந்த்

இந்திய அணியில் தேர்வாளர்களுக்கு தலைவலியை அளித்து வந்த மிடில் ஆர்டருக்கு தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் சரியான தேர்வாக இருப்பதை கடந்த போட்டிகளில் நிரூபித்துள்ளனர்.

பௌலிங்கில் கவனம் செலுத்தும் எதிரணி

பௌலிங்கில் கவனம் செலுத்தும் எதிரணி

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் சாய் ஹோப், தன்னுடைய பெயருக்கு ஏற்றாற்போல அந்த அணிக்கு நம்பிக்கையை அளித்து வருகிறார். இதனிடையே, கடந்த இரு போட்டிகளில் கவனம் செலுத்தியதுபோலவே இந்த போட்டியிலும் தன்னுடைய பௌலிங்கை பலப்படுத்த மேற்கிந்திய தீவுகள் அணி திட்டமிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
3rd ODI against India and West Indies starts in Cuttack at 1.30 pm
Story first published: Sunday, December 22, 2019, 12:07 [IST]
Other articles published on Dec 22, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X