For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம சூர்யகுமாரா இது? அடித்த ஒரே ஒரு மான்ஸ்டர் சிக்ஸர்.. அதிர்ந்துபோன அரங்கம்.. என்ன ஆனது- வீடியோ!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமாரின் மற்றொரு பக்கத்தை பார்த்து ரோகித் சர்மாவே ஆடிப்போனார்.

இரு அணிகளும் மோதி வரும் இந்த கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் விறுவிறுப்பாக சென்றது.

இதில் டாஸில் தோல்வியடைந்த இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து சற்று சொதப்பியது.

சொதப்பல் பேட்டிங்

சொதப்பல் பேட்டிங்

இந்த போட்டியில் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் ருதுராஜ் ஆகியோர் களமிறங்கினர். ஆனால் இது வெற்றிகரமாக இல்லை. ருதுராஜ் கெயிக்வாட் 4 ரன்களுக்கு அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரெயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் சிறப்பாக 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

ஆனால் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இஷான் 33 ரன்களுக்கும், ஸ்ரேயாஸ் 25 ரன்களுக்கும் அடுத்தடுத்து அவுட்டாகினர். கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் இந்திய அணி 93 ரன்களுக்கெல்லாம் 4 விக்கெட்களை இழந்து இக்கட்டான சூழலில் தடுமாறியது.

 சூர்யகுமாரின் அமர்களம்

சூர்யகுமாரின் அமர்களம்

அப்போது களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், நிதானமாக விளையாடி ரன் உயர்த்துவார் என்று எதிர்பார்த்தபோது, திடீரென அதிரடி ரூபத்தை காட்டினார். வந்த வேகத்திலேயே 3 சிக்ஸர்களை விளாசி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். அதிலும் அவர் அடித்த ஒரு சிக்ஸர் தான் " நம்ம சூர்யகுமார் யாதவா இது எனக்கேட்க வைத்தது.

ராட்சத சிக்ஸர்

16வது ஓவரில் டோமினிக் ட்ரேக்ஸ் பந்து வீசிய போது, சூர்யகுமார், திடீரென இருக்கும் இடத்தில் இருந்து நகரத்தொடங்கினார். இதனையடுத்து அவருக்கான பந்தை நேராக போட்டு ஸ்டம்பிற்கு குறிவைத்தார் ட்ரேக்ஸ். ஆனால் சூர்யகுமார் யாதவ் மீண்டும் பின் புறம் வந்து மண்டியிட்டு, அந்த பந்தை ஃபைன் லெக் திசையில் திருப்பிவிட்டார். பந்து நீண்ட தூரம் சென்று சிக்ஸராக மாறியது.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

இப்படிபட்ட ஷாட்டை உலகில் சுலபமாக அடிக்கக்கூடியவர் மிஸ்டர் 360 டிகிரி என்றழைக்கப்படும் டிவில்லியர்ஸ் மட்டுமே. அவரை போன்றே எந்தவித சிரமும் இன்றி சரியான திசையில், சரியான டைமிங்கி வெளுத்து வாங்கினார் சூர்யகுமார் யாதவ். இதனை கண்டு ரோகித் சர்மா, பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்களே அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ரசிகர்களும் அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி என கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Sunday, February 20, 2022, 20:59 [IST]
Other articles published on Feb 20, 2022
English summary
Suryakumar yadhav hits a monster sixer in 3rd t20 against west indies, fans hails india's mr.360 degree
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X