For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலக கோப்பையில் சவாலான அணி இந்தியாவாம்.. கடுப்பான நேரத்தில் கணிப்பு சொல்லும் வாட்சன்

By Veera Kumar

மெல்போர்ன்: 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு, இந்தியாதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அந்த அணியின், ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாட்சன் கூறியுள்ளதாவது: வேறு எந்த நாடுகளையும்விட இந்தியாவின் கள நிலவரம் அந்த அணிக்குதான் நன்கு தெரியும்.

சொந்த மண்ணில் நடைபெற்ற மிகப்பெரிய போட்டித்தொடர்கள் அனைத்திலுமே, இந்தியா சிறப்பான பங்களிப்பை அளித்து வந்துள்ளது வரலாறு.

சிறப்பான அணி

சிறப்பான அணி

இந்திய அணி, அனைத்து வகையிலும் சிறப்பானதாக உள்ளது. அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள், உலக தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அந்த அணியிலுள்ளனர்.

வேகப்பந்து

வேகப்பந்து

வேகப்பந்து வீச்சில், ஆஷிஷ் நெக்ஹா மற்றும் பும்ரா இருவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். அனைத்து துறைகளிலுமே சிறப்பான அணியாக உள்ள இந்தியாவை எதிர்கொள்வது ஆஸ்திரேலியாவுக்கு சவாலானது. இவ்வாறு வாட்சன் தெரிவித்துள்ளார்.

ஆஸி.யுடன் மோதல்

ஆஸி.யுடன் மோதல்

மார்ச் 27ம் தேதி, மொகாலியில், நடைபெற உள்ள, உலக கோப்பை டி20 போட்டித்தொடரின் லீக் ஆட்டத்தில், இந்தியாவை ஆஸ்திரேலியா எதிர்கொள்ள வேண்டியுள்ள நிலையில், வாட்சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒயிட்வாஷ்

ஒயிட்வாஷ்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்து இந்திய அணி வெற்றி வாகை சூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிடம் தோற்றது

இலங்கையிடம் தோற்றது

அதேநேரம், சொந்த மண்ணில், கத்துக்குட்டி வீரர்களோடு வந்த இலங்கையிடம் முதல் டி20 போட்டியில் (நேற்று) தோற்றுள்ள நிலையில், வாட்சன் இவ்வாறு கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போலத்தான் உள்ளது.

Story first published: Wednesday, February 10, 2016, 16:35 [IST]
Other articles published on Feb 10, 2016
English summary
Australian all-rounder Shane Watson believes that hosts India will be the biggest threat to his team in the World T20 which is scheduled to start on March 9.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X