For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸாருதீன் சாதனையை சமன் செய்தார் டோணி

மிர்பூர்: இந்திய அணி ஆசியாக் கோப்பையை 6வது முறையாக வென்றுள்ளதன் கேப்டன் டோணிக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

அதாவது இந்தக் கோப்பையை அஸாருதீன் கேப்டனாக 2 முறை வென்றிருந்தார். ஒரு இந்தியக் கேப்டன் அதிக அளவிலான ஆசியக் கோப்பையை வென்ற பெருமை அஸாரிடம் மட்டுமே இருந்து வந்தது.

தற்போது டோணி அதை சமன் செய்துள்ளார். அவரது தலைமையில் இந்திய அணிக்கு இது 2வது கோப்பையாகும்.

இதற்கு முன்பு

இதற்கு முன்பு

இந்தியா இதற்கு முன்பு 1984, 1988, 1990-91, 1995, 2010 ஆகிய ஆண்டுகளில் இந்தியா ஆசியாக் கோப்பையை வென்றிருந்தது.

6வது முறையாக

6வது முறையாக

தற்போது 6வது முறையாக இந்திய அணி ஆசியாக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

கவாஸ்கர் - வெங்ஸ்.. ஆளுக்கு ஒரு கப்

கவாஸ்கர் - வெங்ஸ்.. ஆளுக்கு ஒரு கப்

கவாஸ்கர், வெங்சர்க்கர் ஆகியோர் தலா ஒரு கோப்பையை வென்றுள்ளனர்.1984ல் கவாஸ்கரும், 88ல் வெங்சர்க்கரும் வென்றனர்.

அஸார் 2 முறை

அஸார் 2 முறை

அஸாருதீன் 1990-91, 1995 ஆகிய இரு ஆண்டுகளில் கோப்பையை வென்றிருந்தார்.

டோணிக்கும் 2 முறை

டோணிக்கும் 2 முறை

அதேபோல தற்போது கேப்டன் டோணி 2010 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த போட்டிகளை வென்று அஸார் சாதனையை சமன் செய்துள்ளார்.

இலங்கை.. இலங்கை.. இலங்கை

இலங்கை.. இலங்கை.. இலங்கை

இதற்கு முன்பு இந்தியா வென்ற அனைத்துப் போட்டிகளிலுமே நமக்கு எதிராக ஆடிய அணி இலங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முறையாக இலங்கை அல்லாத அணி

முதல் முறையாக இலங்கை அல்லாத அணி

இந்த முறைதான் இலங்கை அல்லாத ஒரு அணியை இந்தியா வென்றுள்ளது. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் வங்கதேசத்தை. இந்தியா வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

இரு முதல் கோப்பைகள்

இரு முதல் கோப்பைகள்

ஆசியக் கோப்பைப் போட்டிகள் உண்மையில் 50 ஓவர் போட்டிகள்தான். ஆசியாக் கோப்பையின் முதல் தொடரை இந்தியாதான் வென்றிருந்தது. தற்போது 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு நடந்த முதல் தொடரையும் இந்தியாவே வென்றுள்ளது.

2வது முறையாக சொந்த ஊரில் வீழ்ந்த வங்கதேசம்

2வது முறையாக சொந்த ஊரில் வீழ்ந்த வங்கதேசம்

வங்கதேச அணி 2012ல் சொந்த மண்ணில் நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றது. அப்போதும் இதே மைதானத்தில்தான் தோற்றது. தற்போது 2வது முறையாக அதே மைதானத்தில் இந்தியாவிடம் தோற்றுள்ளது.

Story first published: Monday, March 7, 2016, 12:20 [IST]
Other articles published on Mar 7, 2016
English summary
India defeated Bangladesh by 8 wickets in the final of the first T20 Asia Cup tournament at the Sher-e-Bangla Stadium here on Sunday night to lift their sixth overall title. India have won Asia Cup titles in 1984, 1988, 1990-91, 1995, 2010 and 2016. While Sunil Gavaskar and Dilip Vengsarkar were the captains of the side that won the 1984 and 1988 editions, Mohammad Azharuddin and Mahendra Singh Dhoni led their sides to the title twice---in 1990-91 and 1995 and 2010 and 2016, respectively.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X