கோஹ்லி அதிரடி... தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா.. கெத்து வெற்றி!

Posted By:
தென் ஆப்ரிக்காவை தெறிக்கவிட்ட இந்திய அணி- வீடியோ

கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமாக விளையாடியது.

2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. ஆனால் ஒருநாள் தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

தற்போது தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது, கோஹ்லி மீண்டும் சதம் அடித்து இருக்கிறார்.

கோஹ்லி சதம்

கோஹ்லி சதம்

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச முடிவு செய்துள்ளது. இந்தியா பேட்டிங் களம் இறங்கி இருக்கிறது. ரோஹித் அவுட் ஆனா பின் தவானும், கோஹ்லியும் அதிரடியாக ஆடினார்கள். தவான் 76 ரன்கள் எடுத்தார். கோஹ்லி அதிரடியாக 160 ரன்கள் எடுத்தார். இது அவரது 34வது ஒருநாள் சதம் ஆகும்.

ஸ்பின்

ஸ்பின்

இந்திய அணி இந்த முறையும் அதே அணியுடன் களம் இறங்கி உள்ளது. முக்கியமாக ஸ்பின் பவுலர்கள் சென்ற போட்டி போலவே இதிலும் கலக்கினார்கள். சாஹல், குல்தீப் தலா 4 விக்கெட்கள் எடுத்தனர். பும்ரா 1 விக்கெட் எடுத்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே சொதப்பியது. டுமினி மட்டுமே அதிகமாக 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் வரிசையாக இந்திய சூழலில் அவுட் ஆனார்கள். இதனால் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றது. அதேபோல் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வென்றது. நேற்றைய போட்டியிலும் வென்று இருக்கிறது. இந்த தொடர் வெற்றிகள் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரில் 3-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Thursday, February 8, 2018, 9:15 [IST]
Other articles published on Feb 8, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற