For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இது தேவையா" வெளிநாடுகளில் தோனி சதம் அடித்தாரா? கிண்டல் செய்தவருக்கு அமித் மிஸ்ராவின் அட்டகாச பதிலடி

மும்பை: இந்திய முன்னாள் கேப்டன் தோனி ஆசியா மைதானங்களை தவிர்த்து வேறு எங்கும் சதம் அடித்ததில்லை என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலரின் விமர்சனத்திற்கு அமித் மிஸ்ரா கொடுத்த பதிலடி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

17 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

ராவல்பிண்டி நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் இங்கிலாந்து வீரர்கள் முதல் நாளில் மட்டும் 506 ரன்கள் குவித்தது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்! தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் இந்திய வீரர்கள்? பிசிசிஐ முடிவை மதிக்கிறேன்.. கிரீம் ஸ்மித் சொன்ன தகவல்!

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சதம்

இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சதம்

இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளன்று இங்கிலாந்து அணி 657 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கிராலே 122, டக்கெட் 107, ஓலி போப் 108 மற்றும் ஹாரி ப்ரூக் 153 என 4 வீரர்கல் சதம் விளாசினர். இதன் பின்னர் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்

பாகிஸ்தான் அணியில் ஷஃபிக் 114, இமாம் உல் ஹக் 121, பாபர் அசாம் 136 ரன்கள் என 3 பேர் சதம் விளாசினர். ராவல்பிண்டி பிட்ச் சாதாரண சிமெண்ட் சாலை போல இருப்பதால், பேட்ஸ்மேன்கள் எளிதாக சதம் விளாச முடிகிறது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்களை காப்பாற்றுவதற்காக, பிசிபி நிர்வாகம் இதுபோன்ற ஃபிளாட் பிட்ச்களை தயார் செய்வதாகவும் இந்திய ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

பாக். விமர்சகர் ட்வீட்

பாக். விமர்சகர் ட்வீட்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆர்வலர் ஒருவர், ஆசிய மைதானங்களை கடந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை விடவும் பாகிஸ்தானின் யாசிர் ஷா அதிக சதங்களை விளாசியுள்ளார். அதனால் பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள் ஃபிளாட் டிராக்களில் விளையாடுவதை பற்றி பேச தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.

அமித் மிஸ்ரா ட்வீட்

அமித் மிஸ்ரா ட்வீட்

இதற்கு இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய அமித் மிஸ்ரா பதிலடி கொடுத்துள்ளார். அமித் மிஸ்தா தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வெல்வதற்கு 3 கேப்டன்களும், 24 ஆண்டுகளும் தேவைப்பட்டது.

தோனி பற்றி அமித் மிஸ்ரா

தோனி பற்றி அமித் மிஸ்ரா

ஆனால் தோனி தனிஒருவராக மூன்று கோப்பைகளையும் 7 ஆண்டுகளுக்குள் கைப்பற்றிவிட்டார். அதனால் சத்தம் போடாமல் அமைதி இருக்கவும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.அதேபோல் ஆசியாவை கடந்து மற்ற நாடுகளில் தோனி சதம் விளாசுவதை கடந்து கோப்பைகள் முக்கியம் என்பதும் மறைமுக பதிலடியாக உள்ளது.

Story first published: Sunday, December 4, 2022, 1:23 [IST]
Other articles published on Dec 4, 2022
English summary
Amit Mishra's response to a Pakistani cricketer's criticism that former Indian captain Dhoni has never scored a century anywhere other than Asian stadiums is going viral on social media.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X