For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நேர்மையான, உதவும் உள்ளம் கொண்டவர் ஜெட்லி..! டுவிட்டரில் கண்ணீர் சிந்திய கேப்டன் கோலி

Recommended Video

பழைய வழக்கங்களை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்த அருண் ஜெட்லி | Arun Jaitley Biography

ஆன்டிகுவா: நேர்மையான, மற்றவர்களுக்கு உதவும் உள்ளம் கொண்ட ஜெட்லி, மறைந்து போனது குறித்து அதிர்ச்சி அடைந்ததாக கேப்டன் விராட் கோலி, இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சினையால் கடந்த 9ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. ஆனாலும் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இல்லை.

திடீரென அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த செவ்வாய் கிழமை முதல் செயற்கை சுவாசம், எக்மோ கருவி ஆகியவை அவருக்கு பொருத்தப்பட்டது. அவற்றின் உதவியுடன் ஜெட்லி சிகிச்சை பெற்று வந்தார்.

தீப்பிடித்து எரிந்த வீடு..! மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்..! அடுத்து என்ன..? தீப்பிடித்து எரிந்த வீடு..! மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்..! அடுத்து என்ன..?

உடல்நலம் விசாரிப்பு

உடல்நலம் விசாரிப்பு

பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்டோர் ஜெட்லியின் உடல்நலம் குறித்து நேரில் சென்று விசாரித்து அறிந்தனர். மத்திய அமைச்சர்கள், பாஜக மூத்த நிர்வாகிகள் என பலரும் ஜெட்லியின் உடல்நலம் குறித்து கேட்ட வண்ணம் இருந்தனர்.

ஆழ்ந்த சோகம்

ஆழ்ந்த சோகம்

ஜெட்லியின் உடல்நிலை நேற்று இரவிலிருந்து மிகவும் மோசமடைந்தது. இந் நிலையில் அவர் காலமானதாக அதிகாரப்பூர்வமாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது. அவரது மறைவு பாஜக கட்சியினரிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இரங்கல் செய்தி

இரங்கல் செய்தி

பிரபல கட்சிகளின் முக்கிய தலைவர்கள், முக்கிய அரசியல் பிரபலங்கள், விளையாட்டு உலக ஜாம்பவான்கள் என பலரும் ஜெட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேப்டன் விராட் கோலி, டுவிட்டரில் தமது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

டுவிட்டரில் கோலி

அவர் கூறியிருப்பதாவது: அருண் ஜெட்லி மறைவு குறித்த தகவல் கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் சிறந்த நேர்மையான மனிதர், எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு கொண்டவர். 2006ம் ஆண்டு எனது தந்தை மறைவின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, August 24, 2019, 17:35 [IST]
Other articles published on Aug 24, 2019
English summary
Indian skipper virat kohli released a condolence message for arun jaitley through twitter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X