For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி Vs ரோகித் மோதல்..? 2 அணிகளான வீரர்கள்.. வெளிச்சத்துக்கு வந்த கோஷ்டி அரசியல்

மும்பை: உலக கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், அணியில் தற்போது 2 குரூப்புகள் இயங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலக கோப்பையை வெல்லும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் இந்தியாவும் ஒன்று. மற்றொரு அணியான இங்கிலாந்து பைனலுக்கு சென்றுவிட்டது. நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் அந்த அணி இந்தியாவை தோற்கடித்த நியூசிலாந்தை சந்திக்கிறது.

உலக கோப்பையில் தோற்றதால், இந்திய அணி நிர்வாகம் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது. அணியில் வீரர்களின் தேர்வு, அம்பத்தி ராயுடு ஓய்வு அறிவிப்பு, அரையிறுதியில் தோனியை 7வது வீரராக இறக்கியது என பல சர்ச்சைகள் எழுந்தன.

மாறிய அணி வரிசை

மாறிய அணி வரிசை

அவற்றில் முக்கியமாக பார்க்கப்பட்டது நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 5ம் வரிசையில் தினேஷ் கார்த்திக்கையும், அதன்பின், பாண்டியாவையும் இறக்கியது ஆகும். உலக கோப்பை அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இருந்த ராயுடுவை, 2 வீரர்கள் காயத்தால் விலகியும் அணியில் எடுக்காதது கடும் விமர்சனத்துக்குள்ளானது.

விரைவில் விசாரணை

விரைவில் விசாரணை

உலக கோப்பை தோல்வியை தொடர்ந்து, மறு ஆய்வு செய்ய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக்குழு, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் தேர்வுக்குழு தலைவர் பிரசாத் ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளது.

2 அணிகள்

2 அணிகள்

இந்நிலையில், ரோகித் மற்றும் கோலி தலைமையில் இந்திய வீரர்கள் இரண்டு குழுக்களாக செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முக்கியமான, அணியின் தூண்கள் என்ற பட்டியலில் இவர்கள் இருவரும் உள்ளதால், அணியில் இருந்து தூக்கப்படுவது நடக்காது.

கோலிக்கு நெருக்கம்

கோலிக்கு நெருக்கம்

மற்றவர்களில் ராகுல், சாஹல் (இவர் கோலியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி வீரர்) இருவரும் கோலிக்கு நெருக்கமான வீரர்கள் என்றும், சரியாக விளையாட வில்லை என்றாலும் அனைத்து போட்டிகளிலும் அணியில் இடம்பெற்றிருந்தனர் என்றும் தெரிகிறது. இஷ்டம் போல செயல்படும் கோலியின் மனநிலை தான் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மோதல் போக்கு

மோதல் போக்கு

பிசிசிஐ நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராயின் ஆதரவு பெற்றுள்ளதால், கோலியை அவர் கேள்வி கேட்பது இல்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரவி சாஸ்திரியிடமும் கோலி மோதல் போக்கை கடைபிடித்திருந்தார். முன்னாள் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கோலி அதிருப்தி அடைந்து, பின்னர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் ஆனதும் என்பதை உற்று பார்க்க வேண்டும்.

உருவாக காரணம்

உருவாக காரணம்

இது தவிர கோலிக்கும், ரோகித்துக்கும் இருக்கும் உரசல்கள் காரணமாக அணியின் வீரர்கள் 2 குழுக்களாக இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. அதாவது, ஐபிஎல்லில் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி மண்ணை கவ்வியது. ஆனால், கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவின் மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது. இதுவும் 2 குரூப்புகள் உருவாக காரணம் என்று நம்பப்படுகிறது.

Story first published: Saturday, July 13, 2019, 17:27 [IST]
Other articles published on Jul 13, 2019
English summary
Indian team divided in to 2 groups who support virat kohli and rohit Sharma.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X