படம் காட்டி சம்பாதிக்கும் கோஹ்லி

Posted By: Staff

டெல்லி: மிகச் சிறந்த இந்திய கிரி்க்கெட் கேப்டன்கள் வரிசையில் இடம்பெற்றுள்ள விராட் கோஹ்லி, படம் போட்டே ஆண்டுக்கு, ரூ. 3.2 கோடி சம்பாதிக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா.

உலகின் மிகவும் வலுவான கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், மிகச் சிறந்த ஒருதினப் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்திலும் விராட் கோஹ்லி உள்ளார்.

Instagram pays Kohli

உலகின் சிறந்த பிராண்ட் மதிப்பு கொண்ட வீரர்கள் பட்டியலில், பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி சமீபத்தில் கோஹ்லி முன்னேறினார்.

இவ்வாறு மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரராகத் திகழும் விராட் கோஹ்லி, இன்ஸ்ட்ராகிராம் இணையதளத்தில் தன்னுடைய படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

இவரைப் போலவே பல வீரர்கள், வீராங்கனைகளும் படங்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு வெளியிடும் படங்களுக்காக, தங்களுடைய பெயரை பிரபலபடுத்துவதற்காக இன்ஸ்டாகிராம் பணம் அளித்து வருகிறது.

அந்த வகையில், இன்ஸ்டாகிராமில் 1.65 கோடி பேர் பின்தொடரும் விராட் கோஹ்லி, படங்கள் வெளியிட்டு மட்டும் ஆண்டுக்கு, ரூ.3.2 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார்.

உங்களுடைய கணிப்பு மிகவும் சரி. இதில் அதிகப் படங்கள், நடிகை அனுஷ்கா சர்மாவுடன் விராட் கோஹ்லி இருக்கும் படங்களே.


Story first published: Wednesday, November 8, 2017, 10:17 [IST]
Other articles published on Nov 8, 2017
Please Wait while comments are loading...