For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை இல்லாத ஐபிஎல் கிரிக்கெட்டை பார்க்க ஆளில்லை.. டிவி டி.ஆர்.பி மளமள சரிவு

By Veera Kumar

மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட குறைந்துள்ளதாக டிவி சேனல் டி.ஆர்.பி ரேட்டிங் தெரிவிக்கிறது.

8 அணிகள் மோதும், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை சோனி குழுமம் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது. போட்டி தொடங்கிய முதல் வார டி.ஆர்.பி. ரேட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஐபிஎல் போட்டித்தொடரின் முதல் வாரத்தில் பதிவான டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒப்பிட்டால், இவ்வாண்டில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரியவருகிறது.

இங்கும் டோணிதான்

இங்கும் டோணிதான்

இந்த முதல் வார போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டோணி தலைமையிலான ரைசிங் புனே அணிகள் நடுவேயான ஆட்டம்தான் அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. டெலிவிஷன் வியூவர்ஷிப் ரேட்டிங் கணக்குப்படி இது 3.24 புள்ளிகளாகும்.

சரிவு

சரிவு

இதற்கு அடுத்தபோட்டி கொல்கத்தா மற்றும் டெல்லி நடுவேயானது. இப்போட்டிக்கான ரேட்டிங் 2.55 புள்ளி என்ற அளவில் சரிந்தது.

சென்னை இல்லை

சென்னை இல்லை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாடு முழுவதிலும் அனைத்து மாநிலங்களிலும் கணிசமான ரசிகர்கள் இருந்தனர். தங்கள் மாநில அணிக்கு அடுத்தபடியாக, எல்லோருமே ஏகோபித்த தேர்வாக சென்னையை ரசித்தனர். ஆனால் இவ்வாண்டு சென்னை அணியால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாதது ரசிகர்களை துவள செய்துள்ளது.

அதிசயம் நிகழுமா

அதிசயம் நிகழுமா

ஐபிஎல் தொடரில் கெயில் புயல் வீசுவது போன்ற ஏதாவது அதிரடி சம்பவங்கள் நடந்தால் போட்டித்தொடருக்கான பார்வையாளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Story first published: Wednesday, April 27, 2016, 16:34 [IST]
Other articles published on Apr 27, 2016
English summary
The latest television ratings for the first week of IPL 2016 reveal a marked drop from the corresponding period last year, indicating that the audience has not warmed up to the Twenty20 league like in past seasons.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X