For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

குறைந்த பந்துகளில் சரவெடி சதங்கள்.. டாப் 10 ஐபிஎல் பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்

ஐபிஎல் தொடர் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், குறைந்த பந்துகளில் சதம் விளாசிய டாப் 10 வீரர்களை பற்றி நீங்களும் அறிந்து கொள்ளலாமே.

By Veera Kumar

சென்னை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான, ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னர் இரு தினங்கள் முன்பு நடந்த போட்டியொன்றில், கொல்கத்தா அணிக்கு எதிராக 50 பந்துகளில் 126 ரன்களை குவித்தார். 43 பந்துகளிலேயே அவர் சதம் கடந்தார்.

இந்த அதிரடி ரசிகர்கள் மனதில் மறக்கும் முன்பாக நேற்றைய போட்டியில் புனே வீரர் பென் ஸ்டோக்ஸ், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக சதம் விளாசினார்.

ஐபிஎல் தொடர் 10வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், குறைந்த பந்துகளில் சதம் விளாசிய டாப் 10 வீரர்கள் பற்றிய ஒரு அறிமுகத்தை நீங்களே பாருங்கள்.

முதலிடம்

முதலிடம்

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தற்போதைய ஆர்.சி.பி வீரரான கிறிஸ்கெய்ல். 2013ல் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக வெறும் 30 பந்துகளில் சதம் விளாசினார். அந்த போட்டியில் அவர் 66 பந்துகளில் 175 ரன்களை குவித்தார். தனி ஒரு பேட்ஸ்மேனின் உச்சபட்ச ஐபிஎல் ஸ்கோரும் இதுவாகும்.

யூசுப் பதான்

யூசுப் பதான்

இப்பட்டியலில் 2வது இடத்தில் இருப்பவர் யூசுப் பதான். 37 பந்துகளில் சதம் விளாசினார். 2010ல் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக, மும்பைக்கு எதிராக இச்சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்த ஆட்டம் தான் கண்டதிலேயே பெஸ்ட் என அப்போதைய கேப்டன் ஷேன் வார்னே பாராட்டினார்.

மில்லர் மிரட்டல்

மில்லர் மிரட்டல்

2013ல் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர், பஞ்சாப் அணிக்காக, பெங்களூர் அணிக்கு எதிராக 38 பந்துகளில் சதம் விளாசினார். அவர் களம்புகுந்தபோது அணி வெற்றிக்கு 140 ரன்கள் தேவைப்பட்டது. 2 ஓவர்கள் எஞ்சிய நிலையிலேயே அந்த அணி வெற்றி பெற்றுவிட்டது.

கில்கிறிஸ்ட்

கில்கிறிஸ்ட்

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடிய ஆஸி. அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் 2008ம் ஆண்டு நடந்த மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் 42 பந்துகளில் சதம் விளாசினார். 154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய கில்கிறிஸ்ட் அணி, 12 ஓவர்களிலேயே அதை சாதித்தது.

மிஸ்டர் 360 டிகிரி

மிஸ்டர் 360 டிகிரி

2016ல் ஆர்.சி.பி வீரர் டிவில்லியர்ஸ், குஜராத் லயன்சுக்கு எதிராக 42 பந்துகளில் சதம் விளாசினார். 12 சிிக்சர்கள், 10 பவுண்டரிகள் இதில் உள்ளடங்கும். 52 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார் டிவில்லியர்ஸ்.

வதம் செய்த வார்னர்

வதம் செய்த வார்னர்

நடப்பாண்டில் கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைதராபாத் வீரர் டேவிட் வார்னர் 43 பந்துகளில் சதம் விளாசினார். 8 சிக்சர்கள், 10 பவுண்டரிகளை அவர் விளாசினார். 11வது ஓவரிலேயே சதம் கடந்தார் வார்னர்.

இங்கேயும் சாதனை

இங்கேயும் சாதனை

இலங்கையின் முன்னாள் ஜாம்பவான், சனத் ஜெயசூர்யா, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார். 2008ம் ஆண்டு நடந்த போட்டியில் இவ்வாறு அதிரடி காட்டியிருந்தார்.

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே வீரராக இருந்த முரளி விஜய், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2010ல் நடைபெற்ற ஒரு போட்டியில் 46 பந்துகளில் சதம் விளாசினார். மொத்தம், 127 ரன்களை அவர் குவித்தார். சிஎஸ்கே கடைசி 10 ஓவர்களில் மட்டும் 155 ரன்களை விளாசி 246 ரன்களை குவித்தது.

திரும்பவும் கெய்ல்

திரும்பவும் கெய்ல்

இந்த பட்டியலில் 9வது இடத்தில் மீண்டும் கிறிஸ் கெயில் இடம் பிடித்துள்ளார். 2015ல் ஆர்.சி.பிக்காக, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியொன்றில், 46 பந்துகளில் கெய்ல் சதம் விளாசினார்.

அதிரடி, சரவெடி

அதிரடி, சரவெடி

அட, பட்டியலில் 10வது இடமும் கெய்லுக்குத்தான். 2011ல் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், ஆர்.சி.பி வீரரான கெய்ல் 46 பந்துகளில் சதம் விளாசினார். அந்த தொடரில் மட்டும் கெய்ல் 608 ரன்களை குவித்திருந்தார்.

Story first published: Tuesday, May 2, 2017, 13:44 [IST]
Other articles published on May 2, 2017
English summary
One of the major reasons for the popularity of Twenty20 cricket is because this format guarantees explosive batting and stroke plays from the batsmen.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X