For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹைதராபாத்தை கிண்டல் செய்த கோஹ்லி... பேட்டிங்கில் மாஸ் காட்டி பதிலடி கொடுத்த சன் ரைசர்ஸ்

நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அதிரடியாக வென்றுள்ளது.

By Shyamsundar

Recommended Video

ஹைதராபாத்தை கிண்டல் செய்த கோஹ்லி...பதிலடி கொடுத்த வில்லியம்சன்- வீடியோ

டெல்லி: நேற்று டெல்லிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி அதிரடியாக வென்றுள்ளது.

நாங்க பவுலிங்கில் மட்டுமில்ல பேட்டிங்கிலும் சிறந்த அணிதான் என்று நிரூபித்துள்ளனர். டெல்லியின் 187 ரன்கள் இலக்கை எளிதாக 18.5 ஓவரில் எடுத்து வெறும் 1 விக்கெட் மட்டும் இழந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வென்றுள்ளது.

தற்போது புள்ளி பட்டியலில் அந்த அணிதான் முதலிடம் வகிக்கிறது. ஹைதராபாத் இருக்கும் வலிமையான நிலையை பார்க்கும் போது, கண்டிப்பாக இறுதிப் போட்டியில் சிறப்பாக ஆடும் என்று கூறப்படுகிறது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமாகவே இருந்தது. தவான் சரியான பார்மில் இல்லை. கேன் வில்லியம்சனும், அவ்வப்போது யூசுப் பதானும் மட்டுமே சரியாக ஆடி வந்தனர். எல்லா போட்டியிலும் ஹைதராபாத் மிகவும் குறைந்த ரன்களே எடுத்து வந்தது. ஆனால் ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர் மிகவும் வலுவாக இருக்கிறது.

பெங்களூர்

பெங்களூர்

இந்த நிலையில் ஒரு வாரம் முன்பு ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்தது. கடைசி ஓவரில் 12 ரன் அடிக்க முடியாமல் பெங்களூர் தோற்றது. முதலில் இறங்கிய ஹைதராபாத், 20 ஓவரில் ஆல் அவுட்டாகி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் இறங்கிய பெங்களூர் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 5 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி ஹைதராபாத் வெற்றி பெற்றது.

கோஹ்லி

கோஹ்லி

இதற்கு பின் கோஹ்லி முக்கியமான ஒரு பேட்டி அளித்து இருந்தார். அதில் ''ஹைதராபாத் அணியிடம் பேட்டிங் ஆர்டர் சரியாக இல்லை. ஆனால் அந்த அணியின் பவுலிங் ஆர்டர் மிகவும் சிறப்பாக உள்ளது. பவுலிங் ஆர்டரை வைத்து அந்த அணி எப்போதும் வெற்றிபெறுகிறது.''' என்று கொஞ்சம் கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். சென்னை மட்டுமே மிகவும் சமமான பலத்துடன் இருக்கிறது என்றார். இது கொஞ்சம் ஹைதராபாத் ரசிகர்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கியது.

ஹைதராபாத் பதிலடி

ஹைதராபாத் பதிலடி

இந்த நிலையில்தான் கோஹ்லியின் இந்த பேட்டிக்கு ஹைதராபாத் பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, நேற்று நடந்த போட்டியில் ஹைதராபாத்தின் பவுலிங்கை விட பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஹைதராபாத் அணியில் தவான் மிகவும் அதிரடியாக ஆடி 92 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆடி 83 ரன்கள் எடுத்தார். வெறும் 1 விக்கெட்டை இழந்து அந்த அணி வெற்றிபெற்றது.

Story first published: Friday, May 11, 2018, 13:43 [IST]
Other articles published on May 11, 2018
English summary
IPL 2018: SRH replied Kohli's sarcastic interview in yesterday match against DD.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X