For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஹைதராபாத்தா.. சிஎஸ்கேவா.. இந்த ஐபிஎல்லில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா?

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.

By Shyamsundar

Recommended Video

ஹைதராபாத்தா...சிஎஸ்கேவா..எந்த அணி பெஸ்ட் தெரியுமா?- வீடியோ

சென்னை: இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. இரண்டு அணியும் கண்டிப்பாக இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் ஹைதராபாத் 8 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது.7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை இரண்டாம் இடத்தில் உள்ளது.

சென்னை ஏற்கனவே ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் வென்றுவிட்டது. இரண்டு அணிகளுக்கும் இடையில் இன்னொரு போட்டி மட்டும் நடக்க உள்ளது. சென்னை அணி இன்னும் ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

யாருக்கு சிறந்த பவுலிங்

யாருக்கு சிறந்த பவுலிங்

இந்த ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணியின் பவுலிங் ஆர்டர்தான் மிகவும் சிறந்த பவுலிங் ஆர்டர் ஆகும். ரஷீத் கான், புவனேஷ்வர்குமார், ஷாஹிப் அல் ஹஸன், தீபக் ஹூடா, சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் என்ற இளம் பவுலிங் படையை கொண்டு தெறிக்கவிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். நாங்க வயசானவங்கதான், ஆனா நீங்களாம் சின்ன பசங்க பாஸ் என்ற சென்னையின் பவுலர்களும் திணறிடிக்கிறார்கள். பிராவோ, சாகர், லுங்கி, ஹர்பஜன் சிங், பார்மிற்கு திரும்பி உள்ள ஜடேஜா ஆகியோர் மிகவும் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிர் அவ்வப்போது நன்றாக பந்து வீசுகிறார்.

சென்னை பேட்டிங்

சென்னை பேட்டிங்

ஆனாலும் பவுலிங்கில் யார் பெஸ்ட் என்றால் அது ஹைதராபாத் அணிதான். அதே சமயம் இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கில் யார் பெஸ்ட் என்ற பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு சென்னை அணியின் பெயரை சொல்லலாம். வாட்சன், ரெய்னா, ராயுடு, தோனி, பிராவோ என எல்லோரும் நல்ல பார்மில் இருக்கிறார்கள். சாம் பில்லிங்கிஸ் ஆபத்தில் கை கொடுக்கிறார். ஜடேஜா, டு பிளசிஸ் ஆகியோர் மட்டும் இன்னும் பார்மிற்கு திரும்பிவில்லை. ஆனால் ஹைதராபாத் அணியின் யூசுப் பதான், கேன் வில்லியம்சன் தவிர வேறு யாரும் பார்மில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூல் கேப்டன்கள்

கூல் கேப்டன்கள்

இந்த ஐபிஎல் போட்டியில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன வென்றால், இரண்டு அணியின் கேப்டன்களுமே கூல் கேப்டன்கள் என்பதுதான், தோனி எந்த மோசமான சூழ்நிலையிலும் மிகவும் கூலாக இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைத்தான் தற்போது கேன் வில்லியம்சனும் பின்பற்றி வருகிறார். அணிக்கு கடைசி நேரத்தில் வந்தாலும், முகத்தில் எந்த விதமான மாற்றத்தையும் காட்டிக் கொள்வது இல்லை. எதிரணிக்கு மிகவும் குறைவான இலக்கை நிர்ணயித்துவிட்டு கூட மிகவும் கூலாக விளையாடுகிறார்.

பெஸ்ட் யார்

பெஸ்ட் யார்

இந்த நிலையில், அட இந்த ரெண்டு டீம்ல யார்தான் பாஸ் பெஸ்ட் டீம் என்ற கேள்வி எல்லோருக்கும் எழுந்து இருக்கிறது. இதுவரை ஐபிஎல் போட்டியை பார்த்தவர்களின் கணிப்பு படி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு சென்னையும் ஹைதராபாத் அணியும்தான் செல்லும் என்று கூறப்படுகிறது. சென்னை அணி இரண்டு வருடம் கழித்து கோப்பை வெல்ல முயற்சி எடுத்து வருகிறது. இளம் வீரர்களை வைத்துக் கொண்டு ஹைதராபாத் இன்னொரு முறை கப் அடிக்க ஆசைப்படுகிறது. இவர்களில் யார் பெஸ்ட் என்பதை இறுதி போட்டி தீர்மானிக்கும் என்று நம்பலாம்.

Story first published: Tuesday, May 8, 2018, 10:50 [IST]
Other articles published on May 8, 2018
English summary
IPL 2018: Which is the strongest team SRH or CSK ?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X