For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி இதயம் உடைஞ்சு போச்சு.. அவரை இப்படி பார்த்ததே கிடையாது..!! காரணம் என்ன?

ஹைதராபாத் : ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு மிக அருகே இருந்த சென்னை அணி தோல்வி அடைந்தது. இந்த நிலையில், போட்டிக்குப் பின் சென்னை அணியின் கேப்டன் தோனி மனமுடைந்து காணப்பட்டதாகவும், இதற்கு முன் தோனியை அப்படி பார்த்ததே இல்லை எனவும் அவரிடம் பேட்டி எடுத்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இதில் இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. தோனி மனமுடையக் காரணம் என்ன? குறிப்பாக அதை சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ட்விட்டரில் அதை ஏன் பரிதாபம் தெரிவிக்கும் வகையில் வெளிப்படுத்தினார்?

தோனி கிரிக்கெட்டின் சகாப்தம்..! அவரால் எதுவும் முடியும்...! புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர் தோனி கிரிக்கெட்டின் சகாப்தம்..! அவரால் எதுவும் முடியும்...! புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்

காரணம் என்ன?

காரணம் என்ன?

தோனி ஐபிஎல் இறுதிப் போட்டியின் தோல்வியால் மனமுடைய முக்கிய காரணம், தோனிக்கு தவறாக அளிக்கப்பட்ட ரன் அவுட் தீர்ப்பு. மும்பை அணி நிர்ணயித்த 150 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடி வந்த போது, 3 விக்கெட்கள் இழந்த பின் தோனி களமிறங்கினார்.

ரன் அவுட் முயற்சி

ரன் அவுட் முயற்சி

அப்போது, பந்து ஓவர்த்ரோ செய்யப்பட்டதால் இரண்டாவது ரன் ஓடினார் தோனி. அப்போது ரன் அவுட் முயற்சி செய்யப்பட்டது. ரீப்ளேவில் தோனி பேட்டை கிரீஸ்-க்குள் வைப்பது போலத்தான் இருந்தது, ஆனால், அதை உறுதி செய்ய முடியவில்லை.

பறிபோன வெற்றி

பறிபோன வெற்றி

இது போன்ற சூழலில் அம்பயர் பேட்ஸ்மேனுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், தோனிக்கு அவுட் கொடுத்தார் மூன்றாவது அம்பயர். இது போட்டியின் திருப்பு முனையாக அமைந்தது. தோனி களத்தில் அதிக நேரம் நின்று இருந்தால், மும்பை அணி அழுத்தத்தை சந்தித்து இருக்கும். சென்னை அணி வெற்றி பெற்று இருக்கும்.

தவறான தீர்ப்பு காரணம்

தவறான தீர்ப்பு காரணம்

அம்பயர் வழங்கிய தவறான தீர்ப்பு, தோனி மனமுடைய முக்கிய காரணமாக இருக்கலாம். ஆனால், அதை ஏன் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பரிதாப தொனியில் வெளிப்படுத்தினார் என்பது இங்கே முக்கியம். காரணம், மஞ்ச்ரேக்கர், இறுதிப் போட்டியின் துவக்கம் முதல், இறுதி வரை மும்பை அணிக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வர்ணனை செய்து வந்தார்.

மும்பை ஆதரவு

பல நடுநிலை ரசிகர்கள் அவரது செயலை கண்டித்தனர். அதே போல போட்டி முடிந்த பின் ஒவ்வொரு மும்பை அணி உறுப்பினரையும் (முதலாளி உட்பட..) சந்தித்து அப்படி ஒரு ஆனந்தம் பொங்க பேட்டி எடுத்தார். மருந்துக்கு ஒரு சென்னை அணி வீரரையும் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக பரிசளிப்பின் போது, தோனியிடம் பேசினார். அப்போது தான் தோனி மனமுடைந்து இருந்தார், அவரை இப்படி பார்த்ததே இல்லை எனவும் ட்விட்டரில் கூறியுள்ளார்.

கிண்டல் செய்தாரா?

கிண்டல் செய்தாரா?

தீவிர மும்பை அணி ஆதரவாளராக காணப்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தோனியை பார்க்க பாவமாக இருந்தது என வெளியிட்டுள்ள பதிவு அவரை கிண்டல் செய்வதாக எடுத்துக் கொள்வதா? இல்லை உண்மையான அக்கறை என எடுத்துக் கொள்வதா?

Story first published: Monday, May 13, 2019, 17:09 [IST]
Other articles published on May 13, 2019
English summary
IPL 2019 MI vs CSK : Sanjay Manjrekar says Dhoni seemed really heartbroken
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X