For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல்ல பிரச்சனைன்னு ஒத்துக்கணும்.. அப்ப தான் ரிப்பேர் பண்ண முடியும்.. போட்டு உடைத்த முன்னாள் வீரர்!

மொஹாலி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரஹானே ஐபிஎல் தொடரில் சுமாராகவே பேட்டிங் ஆடி வருகிறார்.

அவரது ரன் சராசரி 25 என்ற அளவிலேயே உள்ளது. ரஹானேவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை வைத்துப் பார்த்தால், இது மிகவும் குறைவு.

தோனிக்கு காயம்னா.. நான் தான் பேன்ட்-எய்ட்! தெளிவா சொன்ன தினேஷ் கார்த்திக்!! தோனிக்கு காயம்னா.. நான் தான் பேன்ட்-எய்ட்! தெளிவா சொன்ன தினேஷ் கார்த்திக்!!

ரஹானே கெத்து

ரஹானே கெத்து

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன், ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் துணை கேப்டன் என கெத்தாக வலம் வந்தாலும், ரஹானேவின் பேட்டிங் பார்ம் கடந்த இரு ஆண்டுகளாகவே படுத்து விட்டது என்பதே உண்மை.

பேட்டிங் திறன் சரிவு

பேட்டிங் திறன் சரிவு

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரஹானேவின் டெஸ்ட் சராசரி 24 மற்றும் 37. அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆடத் துவங்கிய போது, கோலி போன்ற ஒரு வீரர் என புகழப்பட்டார். ஆனால், அவரது பேட்டிங் திறன் சரிந்து கொண்டே வந்து கடந்த இரு ஆண்டுகளாகவே மோசமாகவே உள்ளது.

பேட்டிங் பார்ம்

இந்த நிலையில், அவரது ஐபிஎல் பேட்டிங் பார்ம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "சில நாட்களாகவே இதை எண்ணிக் கொண்டு இருக்கிறேன். ரஹானே தன் பேட்டிங் பார்ம் குறித்து தெரிந்து கொள்ளாமலேயே இருக்கிறார். அவர் தனது பேட்டிங்கில் பிரச்சனை உள்ளது என தெரிந்து கொண்டால் மட்டுமே, அதை ரிப்பேர் செய்ய முடியும்" என சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதரவு இல்லை

ஆதரவு இல்லை

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மற்றும் ரஹானே இருவரும் மும்பையை சேர்த்த கிரிக்கெட் வீரர்கள். பொதுவாக மும்பை கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள் வெளியில், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரித்துப் பேசுவார்கள். ஆனால், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரஹானே பேட்டிங் பார்ம் பற்றி பொதுவெளியில் போட்டு உடைத்துள்ளார்

Story first published: Wednesday, April 17, 2019, 12:46 [IST]
Other articles published on Apr 17, 2019
English summary
IPL 2019 KXIP vs RR : Rahane is living in denial about his batting form says Sanjay Manjrekar
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X