For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெற்றிப்பாதைக்கு திரும்பிய மறுநாளே இப்படியா.. சிஎஸ்கேவிற்கு பெரிய சிக்கல்.. என்ன செய்ய போகிறார் தோனி

துபாய்: சிஎஸ்கே அணியில் ஓப்பனிங் இறங்கி விளையாடி வரும் டு பிளசிஸ் தற்போது முழு பார்மில் உள்ளார். இந்த நிலையில் டு பிளசிஸ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரை முதலில் சிஎஸ்கே வெற்றியோடுதான் தொடங்கியது.

முதலில் மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் வென்றது. ஆனால் அடுத்தடுத்த 3 போட்டிகளில் சிஎஸ்கே மிக மோசமாக ஆடி தோல்வி அடைந்தது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

சிஎஸ்கே தோல்வி காரணமாக அந்த அணியின் மீது கடுமையான அழுத்தம் வைக்கப்பட்டது. முக்கியமாக ஓப்பனிங் வீரர் வாட்சன் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் மிடில் ஆர்டர் வீரர் கேதார் ஜாதவ் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

பதிலடி

பதிலடி

இந்த நிலையில் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும் கடந்த போட்டியில் வாட்சன் பதிலடி கொடுத்தார். பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் வாட்சன் அதிரடியாக ஆடி 53 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி இந்த போட்டியில் 4 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய சிஎஸ்கே 181 ரன்கள் எடுத்து அதிரடி வெற்றி பெற்றது. டு பிளசிஸ் - வாட்சன் ஜோடி பஞ்சாப் பவுலர்களை பாலைவனத்திற்கு பறக்கவிட்டு, சிஎஸ்கேவிற்கு வெற்றியை தேடி தந்தனர்.

டு பிளசிஸ் காயம்

டு பிளசிஸ் காயம்

இந்த தொடரில் சிஎஸ்கே அணிக்காக அனைத்து போட்டியிலும் டு பிளசிஸ் உயிரை கொடுத்து போராடி வருகிறார். மும்பைக்கு எதிரான போட்டியில் இருந்து கடந்த பஞ்சாப் போட்டி வரும் அனைத்திலும் டு பிளசிஸ்தான் சிஎஸ்கேவின் வெற்றிக்காக பாடுபட்டு வருகிறார். இவர் இல்லையென்றால் சிஎஸ்கே பேட்டிங் மொத்தமாக முடங்கும் நிலைக்கு கூட செல்லும்.

முடங்கும்

முடங்கும்

சிஎஸ்கேவின் தூணாக 2020 ஐபிஎல் சீசனில் டு பிளசிஸ் உள்ளார். ஆனால் கடந்த இரண்டு போட்டிகளாக இவர் காலில் காயத்துடன் ஆடி வருகிறார். இவருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இவர் முட்டியில் இருந்த காயம் காரணத்தால் சரியாக ஓட முடியாமல் கஷ்டப்பட்டார்.இதனால்தான் அன்றைய போட்டியில் இவர் ரன் அவுட் ஆனார்.

மோசம்

மோசம்

அதன்பின் பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியிலும் இவர் காலில் காயம் ஆறவில்லை. போட்டி முடிந்த பின் இவர் காலில் கட்டு போட்டு இருந்தார் . அதோடு காலில் ஐஸ் பேக் வைத்து அதோடு நடந்து சென்றார். இவர் காலில் ஐஸ் வைத்து நின்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் இவருக்கு பெரிய காயம் ஏற்பட்டுவிட்டதா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

இவருக்கு உண்மையில் காலில் காயம் உள்ளதா இல்லை லேசான சிராய்ப்பு உள்ளதா என்று விவரங்கள் தெரியவில்லை. சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்னும் இது தொடர்பாக விவரங்களை வெளியிடவில்லை. அதே சமயம் டு பிளசிஸ் காயம் அடைந்தால் தோனி யாரை மாற்று வீரராக இறக்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

கஷ்டம்

கஷ்டம்

டு பிளசிஸ் இல்லை என்றால் சிஎஸ்கே பேட்டிங் ஆர்டர் அதிகம் பாதிக்கும். டு பிளசிஸ் காயம் காரணமாக ஒன்றிரண்டு போட்டியில் விளையாடவில்லை என்றால் தோனி என்ன செய்வார் என்று கேள்விகள் எழுந்துள்ளது. தோனி இதற்காக பிளான் பி வைத்து இருக்கிறாரா. வேறு வலுவான வீரரை அந்த இடத்தில் இறக்குவாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது.

Story first published: Tuesday, October 6, 2020, 14:06 [IST]
Other articles published on Oct 6, 2020
English summary
IPL 2020: Dhoni has to find one substitute player for Du Plesis soon - Here is the reason.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X