நான் என்ன செய்தேன்.. என்னை ஏன் அனுப்பினீர்கள்.. டெல்லியை பழி தீர்த்த அந்த வீரர்.. எவ்வளவு ஆக்ரோஷம்!

துபாய்: மும்பை இந்தியன்ஸ் அணியின் வலுவான பவுலிங் முன் டெல்லி அணியின் பேட்டிங் மொத்தமாக சுருண்டுள்ளது.

டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் தற்போது ஐபிஎல் இறுதிப்போட்டி நடக்கிறது. துபாயில் நடக்கும் இறுதிப்போட்டியில் டெல்லி அணி மோசமாக திணறி வருகிறது.

பேட்டிங்கில் சொதப்பிய டெல்லி அணி இப்போது பவுலிங்கிலும் சொதப்பி வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டிற்கு 156 ரன்கள் எடுத்தது.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

முதலில் பேட்டிங் இறங்கிய டெல்லி அணி தொடக்கத்தில் இருந்து மோசமாக தள்ளாடியது. முக்கியமாக பும்ரா, போல்ட் ஆகியோரின் ஓவரில் பேட்டிங் செய்ய முடியாமல் டெல்லி கடுமையாக திணறியது. இன்னொரு பக்கம் மும்பை அணியில் இன்று ஆடிய ஜெயந்த் யாதவ் ஓவரிலும் டெல்லி பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறினார்கள்.

எப்படி போட்டார்

எப்படி போட்டார்

இதில் அதிகம் கவனிக்க வேண்டியவர்.. மும்பை அணியின் டிரெண்ட் போல்ட்தான். இவர்தான் மொத்தமாக டெல்லி அணியின் அஸ்திவாரத்தையே அசைத்தது. முதல் ஓவரிலேயே ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி, அவரை டக் அவுட் செய்தார். இவர் போட்ட அடுத்த ஓவரிலேயே ரஹானே விக்கெட்டை எடுத்தார்.

யார் விக்கெட்

யார் விக்கெட்

மொத்தமாக 4 ஓவர் வீசிய போல்ட் 30 ரன்கள் கொடுத்தார். 2 விக்கெட்டுகளை பவர் பிளேவில் எடுத்தவர்.. அடுத்து 18வது ஓவரில் ஹெட்மேயர் விக்கெட்டையும் எடுத்தார். இந்த தொடரில் இரண்டு லீக், ஒரு பிளே ஆப், தற்போது பைனல் என்று நான்கு போட்டிகளில் மும்பையை டெல்லி எதிர்கொண்டு இருக்கிறது. நான்கு போட்டியிலும் போல்ட் இப்படித்தான் பந்து வீசி உள்ளார்.

எப்படி

எப்படி

டெல்லிக்கு எதிரான நான்கு போட்டியிலும் முதல் ஓவரிலேயே போல்ட் விக்கெட் எடுத்துள்ளார். இதனால்தான் மும்பையிடம் ஒவ்வொரு முறையும் டெல்லி மோசமாக தோல்வி அடைந்தது. டெல்லி அணியில் இருந்து கடந்த வருடம்தான் போல்ட் வெளியேற்றப்பட்டார். மிகவும் சிறப்பாக் ஆடினாலும் போல்ட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.. அவரை ஏலம் எடுத்த மும்பை அணி.. டெல்லியை அடித்து சாய்த்து உள்ளது.

ஏன் அனுப்பினீர்கள்

ஏன் அனுப்பினீர்கள்

நான் இரண்டு சீசனில் நன்றாக ஆடினேன். என்னை ஏன் வெளியே அனுப்பினீர்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் போல்ட். இவரை ஏலம் விட்டது தவறோ என்று டெல்லி அணி தற்போது சிந்திக்க தொடங்கி உள்ளது. இந்த தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்திய போல்ட் மும்பை அணியின் மேட்ச் வின்னராக மாறியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IPL 2020: Farmer DC player Bould played well against Delhi for Mumbai today
Story first published: Tuesday, November 10, 2020, 22:08 [IST]
Other articles published on Nov 10, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X