For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் பந்திலேயே அதிர வைத்த போல்ட்.. பாண்டிங் திட்டம் மொத்தமாக காலி.. ஷாக் ஆன டெல்லி!

துபாய் : 2020 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் முதல் பந்திலேயே அதிர வைத்தது மும்பை இந்தியன்ஸ்.

டாஸில் தோல்வி அடைந்து முதலில் பந்து வீசிய மும்பை அணி முதல் பந்திலேயே டெல்லி அணியின் துவக்க வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி அதிர வைத்தது.

டெல்லி அணி இதை எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்தது. ரிக்கி பாண்டிங்கின் முக்கிய திட்டம் முதல் பந்திலேயே காலி ஆனது.

அட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா!அட யார் இது.. பரபரப்பான மும்பை-டெல்லி போட்டிக்கு இடையே.. மைதானத்தில் இவரா.. அதுவும் இவ்வளவு ஸ்டைலா!

டாஸ்

டாஸ்

பரபரப்பான ஐபிஎல் இறுதிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது. முதலில் பேட்டிங் செய்து பெரிய ஸ்கோரை இலக்காக நிர்ணயித்தால் மும்பை அணி தடுமாறும் என்பதால் அந்த அணி பேட்டிங் தேர்வு செய்தது.

துவக்க வீரர் மாற்றம்

துவக்க வீரர் மாற்றம்

டெல்லி கேபிடல்ஸ் அணியில் சரியான துவக்க வீரர்கள் அமையாததால் தவானுடன் யாரை பேட்டிங் ஆட வைக்கலாம் என பிளே-ஆஃப் சுற்று வரை குழப்பம் நீடித்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான பிளே-ஆஃப் போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் துவக்க வீரராக இறங்கி அதிரடி ஆட்டம் ஆடினார்.

செம பில்டப்

செம பில்டப்

இந்த நிலையில் இறுதிப் போட்டியில் அவர் அதிரடி ஆட்டம் ஆடி டெல்லி அணியை வெற்றி பெற வைப்பார் என அவருக்கு பெரும் பில்டப் கொடுக்கப்பட்டது. குறிப்பாக கடந்த முறை மும்பை அணி ரன்னே எடுக்காமல் டெல்லி அணியின் 3 விக்கெட்களை சாய்த்து இருந்தது.

ட்ரென்ட் போல்ட் காயம்

ட்ரென்ட் போல்ட் காயம்

ட்ரென்ட் போல்ட் அப்போது முதல் ஓவரிலேயே 2 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அவரை சமாளிக்க மார்கஸ் ஸ்டோய்னிஸ் தான் சரியான பேட்ஸ்மேன் எனவும் கூறப்பட்டது. ட்ரென்ட் போல்ட் காயத்தில் இருந்ததால் இறுதிப் போட்டியில் சரியாக பந்து வீசுவாரா? என்ற குழப்பமும் நிலவியது.

ஏமாற்றிய ரஹானே

ஏமாற்றிய ரஹானே

அடுத்து வந்த ரஹானே நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 2 ரன்கள் எடுத்த நிலையில் போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி 16 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது.

Story first published: Tuesday, November 10, 2020, 20:33 [IST]
Other articles published on Nov 10, 2020
English summary
IPL 2020 Final MI vs DC : Marcus Stoinis duck out in IPL final
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X