For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே கல்லில் பல மாங்காய்.. சரியாக குறி வைத்தால் போதும்.. தோனி மிகப்பெரிய சாதனையை படைக்கலாம்.. பின்னணி

மும்பை: சிஎஸ்கே கேப்டன் தோனியின் பல்வேறு சாதனைகளை காண ரசிகர்களுக்கு இந்தாண்டு ஐபிஎல்-ல் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்ட வீரராக தோனி உள்ளார். ஐபிஎல்-ல் அதிக சீசன்களில் கேப்டனாக இருந்தவரும் இவரே ஆவார்.

வயதாகிவிட்டது என கடந்த சீசனில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்த தோனி இந்தாண்டு படு தீவிரமாக தயாராகி வருகின்றார். இந்நிலையில் அவர் இந்த சீசனில் எட்டவிருக்கும் 7 புதிய மைல்கல்களை பார்க்கலாம்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியது முதல் தோனி சிஎஸ்கே கேப்டனாக இருந்து வருகிறார். ஐபிஎல்-ல் இதுவரை மொத்தம் 188 போட்டிகளுக்கு அவர் கேப்டனாக செயல்பட்டுள்ளார். எனவே இந்த சீசனில் 200 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டவர் என்ற பெருமையை தோனி பெறுவார்.

ரன்கள்

ரன்கள்

மிகவும் அனுபவம் வாய்ந்த வீரரான தோனி, ஐபிஎல் இதுவரை 182 போட்டிகளில் ஆடி 4632 ரன்களை எடுத்துள்ளார். அவர் இன்னும் 368 ரன்களை எடுத்தால், ஐபிஎல்-ல் 5000 ரன்களை எட்டிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைப்பார்.

முதல் இடத்திற்கு போட்டி

முதல் இடத்திற்கு போட்டி

விக்கெட் கீப்பராக தோனி இதுவரை 148 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த சீசனில் இன்னும் 2 விக்கெட்களை எடுத்தால், ஐபிஎல் வரலாற்றி 150 விக்கெட்களை எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தோனி படைப்பார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் தினேஷ் கார்த்திக் (140), உத்தப்பா (90) உள்ளனர்.

அதிக கேட்ச்கள்

அதிக கேட்ச்கள்

ஐபிஎல் தொடரில் ஒரு விக்கெட் கீப்பராக அதிக கேட்ச்களை பிடித்தவர்களில் பட்டியலில் 109 கேட்ச்களுடன் தோனி 2ம் இடத்தில் உள்ளார். முதலிடத்தில் தினேஷ் கார்த்திக் 110 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனவே முதலிடத்தை கைப்பற்ற இருவருக்குள்ளும் கடும் போட்டி இந்த சீசனில் இருக்கும்.

அதிக ரன்கள்

அதிக ரன்கள்

ஐபிஎல் போட்டிகளின் கடைசி ஓவர்களில் அதிக ரன்களை குவித்த வீரராக தோனி 2769 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே போல 20ஆவது ஓவர்களில் 49 சிக்ஸர்களை இதுவரை அவர் அடித்துள்ளார். எனவே இந்த சீசனில் இன்னும் ஒரு சிக்ஸர் அடித்தால் டெத் ஓவர்களில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் ஆவார்.

5வது வீரர்

5வது வீரர்

ஐபிஎல் போட்டிகளில் 5வது வீரராக களமிறங்கி தோனி இதுவரை 1928 ரன்களை சேர்த்துள்ளார். அவர் இன்னும் 72 ரன்களை எடுத்தால், 5வது வீரராக களமிறங்கி 2000 ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெறுவார்.

ஆட்ட நாயகன் விருது

ஆட்ட நாயகன் விருது

ஐபிஎல்-ல் அதிக முறை ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை முந்த தோனிக்கு இன்னும் ஒரே ஒரு விருதுதான் தேவை. தோனி 17 விருதுகளுடம், ரோகித் சர்மாவுக்கு 18 விருதுகளுடனும் உள்ளனர்.

Story first published: Thursday, April 8, 2021, 17:17 [IST]
Other articles published on Apr 8, 2021
English summary
7 Records that CSK's Skipper Dhoni can achieve in the IPL 2021 tournament
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X