For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பண்ட் இனி தோனி மாறிலாம் இல்ல.. பாண்டிங் கிளப்பிய புதிய ஒப்பீடு.. சம்பந்தம் இல்லாம இருக்கே!

மும்பை: டெல்லி அணி ரிஷப் பண்ட் குறித்து இதுவரை யாருமே யோசித்துக் கூட பார்க்காத விஷயத்தை ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்று தனது 2வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.

அவராலதான் போட்டியில தோத்தீங்கன்னு சொல்லல... ஆனா அவர் அணியில வேணுங்க... மஞ்ச்ரேகர் ஆலோசனை! அவராலதான் போட்டியில தோத்தீங்கன்னு சொல்லல... ஆனா அவர் அணியில வேணுங்க... மஞ்ச்ரேகர் ஆலோசனை!

முதல் போட்டியில் டெல்லி அணிக்கு கேப்டனாக சிறப்பான வெற்றியை பெற்றுக்கொடுத்த ரிஷப் பண்ட் 2வது போட்டியிலும் அதனை தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பரவும் தகவல்

பரவும் தகவல்

சமீப காலமாக கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமாகி வரும் பெயர் ரிஷப் பண்ட். பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அசத்திய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறியதால் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே தோனியின் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தினார். இதனால் இவரை இந்திய அணியின் அடுத்த தோனி என அழைக்கும் கருத்து அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்நிலையில் அதற்கு மாறாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் டெல்லி அணி பயிற்சியாளர் ரிஷப் பண்ட். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல்-ல் ரிஷப் பண்ட் குறித்து நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய யுக்தியானது அவரின் பேட்டிங் பொஷிசன் தான். ரிஷப் பண்ட் விராட் கோலி, கேன் வில்லியம்சனை போன்றவர்ன். அவரை முடிந்த அளவிற்கு முன்கூட்டியே களத்திற்கு அனுப்ப வேண்டும். அவர் களத்தில் நிலைத்து நிற்கிறார் என்று தெரிந்தால், அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடப்போகிறோம் என்று அர்த்தமாகும்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

பண்ட்-ன் ஃபிட்னஸ் குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு அவர் லாக்டவுனால் உடல் எடை அதிகரித்து வந்தது ஏமாற்றமளித்தது. அவர் 3 - 4வது போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வந்த போதும், நாங்கள் எதிர்பார்த்ததை கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் தற்போது முழு ஃபார்மில் இருக்கிறார். டெல்லி அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் ஒரு வின்னிங் ப்ளேயராக இருப்பார்.

இடம் பிடிச்சாச்சு

இடம் பிடிச்சாச்சு

ரிஷப் பண்ட்-ன் கீப்பிங்கில் எப்போதுமே ஒரு கேள்வி எழுந்து வருகிறது. அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்த கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் அவரின் சிறப்பான கீப்பை பார்த்தேன். அவரால் முடிந்த வரை தேறி வருகிறார். இவர் இதே செயல்பாட்டை தொடர்ந்து வந்தால் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அடுத்த 10 - 12 வருடத்திற்கு நிச்சயம் இருப்பார் என தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, April 15, 2021, 17:06 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
Australia legend Ricky Ponding Compares Rishabh pant with world's Best batsmens
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X