For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மனமுடைந்த ஆஸ்திரேலிய வீரர்.. ஆர்சிபி கடந்த சீசனில் சொதப்பியதற்கு காரணம்.. பகிரங்கமாக பழிபோட்ட கோச்!

அகமதாபாத்: கடந்தாண்டு ஆர்சிபி சொதப்பியதற்கும் இந்தாண்டு சிறப்பாக ஆடுவதற்கும் பின்னால் உள்ள முக்கிய காரணத்தை பயிற்சியாளர் பங்கார் உடைத்துள்ளார்.

விராட் கோலி தலமையிலான ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இனி நீ தேறமாட்ட.. பூரணுக்கு பதிலாக உலகின் நம்.1 வீரரை களமிறக்கும் பஞ்சாப்.. ப்ளேயிங் 11 கணிப்பு! இனி நீ தேறமாட்ட.. பூரணுக்கு பதிலாக உலகின் நம்.1 வீரரை களமிறக்கும் பஞ்சாப்.. ப்ளேயிங் 11 கணிப்பு!

இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள பெங்களூரு அணி ஒரே ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

சொதப்பல்

சொதப்பல்

இதுவரை ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லாத அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இருந்து வருகிறது. கடந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய அந்த அணி பின்னர் கடும் போராட்டத்திற்கு பின்னர் ப்ளே ஆஃப் வரை சென்ற அந்த அணி வெற்றி பெற முடியாமல் வெளியேறியது.

அசுர பலம்

அசுர பலம்

எனவே இந்த சீசனில் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்ற நோக்கில் வெறிகொண்டு ஆடி வருகிறது. பேட்டிங்கில் மேக்ஸ்வெல், பட்டிக்கல், பவுலிங்கில் முகமது சிராஜ், ஹர்ஷல் பட்டேல் என அனைத்து துறைகளிலும் அந்த அணி கலக்கி வருகிறது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்த முறை ஆர்சிபி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சொதப்பலுக்கான காரணம்

சொதப்பலுக்கான காரணம்

இந்நிலையில் இந்தாண்டு ஆர்சிபி அணியின் மாற்றத்திற்கு முக்கிய காரணம் குறித்து பேட்டிக் கோச், சஞ்சய் பங்கார் கூறியுள்ளார். அவர், கடந்தாண்டு முழுவதும் ஆர்சிபி அணி பேட்டிங்கில் விராட் கோலி, டிவில்லியர்ஸை மட்டுமே நம்பி இருந்தது. அணியின் சில வீரர்கள் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. குறிப்பாக ஆரோன் ஃபின்ச் சரியான பங்களிப்பை கொடுக்கவில்லை. அவரின் சொதப்பல் ஒரு காரணமாக இருந்தது.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

ஆனால் இந்தாண்டு அப்படி இல்லை, விராட் கோலி, டிவில்லியர்ஸை தவிர்த்து பட்டிக்கல், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருகின்றனர். கடந்த போட்டியில் ராஜட் பட்டிதாரின் சிறப்பான ஆட்டத்தை பார்க்க முடிகிறது. ஓவ்வொரு வீரரும் ஒரு நாளில் சிறப்பாக ஆடி ஆட்டத்தை வெற்றி பெறச்செய்கின்றனர். இது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Story first published: Friday, April 30, 2021, 19:27 [IST]
Other articles published on Apr 30, 2021
English summary
Batting Coach Sanjay Bangar explains Reason behind RCB's struggles last season
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X