For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மதிக்கவே இல்லை.. ஜாதவ் வந்ததும்.. தோனி செய்த அந்த காரியம்.. வீடியோவில் பதிவான பரபரப்பு சம்பவம்!

சென்னை: நேற்று ஹைதராபாத் அணியின் வீரர் ஜாதவ் பேட்டிங் இறங்கிய போது தோனி செய்த காரியம் ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Kedar Jadhavவிடம் சிரித்து பேசிய Dhoni, Raina video Viral | Oneindia Tamil

2020 ஐபிஎல் தொடர் வரை சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்தவர் கேதார் ஜாதவ். சிஎஸ்கே அணியில் கடந்த இரண்டு சீசனாக இவர் மிக மோசமாக ஆடினார்.

கடந்த சீசன்ல இருந்து மாத்திக்கிட்டு இருக்கோம்... இதுதான் சிறப்புக்கு காரணம்... பிளமிங் வெளிப்படை கடந்த சீசன்ல இருந்து மாத்திக்கிட்டு இருக்கோம்... இதுதான் சிறப்புக்கு காரணம்... பிளமிங் வெளிப்படை

அதிலும் கடந்த சீசனில் ஒரு சிக்ஸ் கூட அடிக்காமல் ஜாதவ் மோசமாக சொதப்பினார். இதனால் இந்த சீசனில் அவர் சிஎஸ்கே அணியால் எடுக்கப்படவில்லை.

ஹைதராபாத்

ஹைதராபாத்

தற்போது ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டு, ஜாதவ் ஆடி வருகிறார். இதுவரை இரண்டு போட்டிகளில் அந்த அணிக்காக ஜாதவ் இறங்கி உள்ளார். ஆனால் இரண்டிலும் இவர் பெரிதாக ஆடவில்லை. நேற்று சிஎஸ்கே போட்டியில் வரிசையாக பவுண்டரி, சிக்ஸ் அடித்து அசத்தினார்.

அசத்தல்

அசத்தல்

நேற்று ஜாதவ் பேட்டிங் செய்ய வந்த போது கீப்பிங்கில் இருந்த தோனி கிளவுஸை கழட்டிவிட்டு, கீப்பிங் செய்தார். இதன் அர்த்தம் ஜாதவ் ஷாட் அடிக்க மாட்டார் என்பதாகும். எப்படியும் பந்தை அடிக்க மாட்டார், பின்பக்கம் லேசாக தட்டிவிட்டு ஓடுவார் என்று தோனி கணித்து இருந்தார்.

கணிப்பு

கணிப்பு

ஜாதவ் எல்லாம் பெரிதாக ஆட மாட்டார் என்ற நம்பிக்கையில் தோனி இப்படி கிளவுஸை கழட்டிவிட்டு நின்றார். எப்படியும் ஜாதவ் சிங்கிள் எடுப்பார், அவரை ரன் அவுட் செய்யலாம் என்று தோனி இப்படி செய்தார். தோனி இப்படி நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 ஷாட்

ஷாட்

ஆனால் நேற்று தோனியின் கணிப்பை பொய்யாக்கி ஜாதவ் அதிரடியாக ஷாட்களை அடித்தார். வரிசையாக பவுண்டரி, சிக்ஸ் என்று அடித்து மேட்சை முடித்தார். போட்டி முடிந்த பின் தோனியும், ஜாதவும் சகஜமாக பேசிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, April 29, 2021, 17:24 [IST]
Other articles published on Apr 29, 2021
English summary
IPL 2021: Dhoni removed his glouse when Kedar Jadhav arrived to bat yesterday.'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X