For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி செய்த தவறு இதுதான்.. இல்லைனா வேற மாதிரி ஆயிருக்கும்.. சிந்திக்க வைத்த முன்னாள் வீரரின் அட்வைஸ்

சென்னை: கேப்டன் எம்.எஸ்.தோனி, பேட்டிங்கில் எந்த இடத்தில் தவறு செய்கிறார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சுலபமாக வெற்றி பெற்றது.

அவரை ரொம்ப புடிக்கும்...டாசுக்காக அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்!அவரை ரொம்ப புடிக்கும்...டாசுக்காக அவரோட நடந்து போனது அப்படி ஒரு பீல் கொடுத்துச்சு...ரிஷப் உற்சாகம்!

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி வந்த வேகத்தில் நடையைகட்டி அதிர்ச்சி அளித்தார்.

அபார வெற்றி

அபார வெற்றி

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த ரெய்னா அரை சதம் அடித்து அணியை மீட்க 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி ப்ரித்வி ஷா மற்றும் தவானி உதவியுடன் 18.4 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 வருத்தம்

வருத்தம்

சென்னை ரசிகர்களுக்கு சிஎஸ்கேவின் தோல்வியை விட கேப்டன் தோனி டக் அவுட்டானதுதான் மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் 7வது வீரராக களமிறங்கிய தோனி வெறும் 2 பந்துகளையே சந்தித்து டக் அவுட் ஆனார். வழக்கமாக களமிறங்கியவுடன் நிதானமாக செயல்படும் அவர், நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆட முயன்று ஆவேஷ் கான் பந்துவீச்சில் போல்ட் செய்யப்பட்டார்.

தவறு

தவறு

இதுகுறித்து அட்வைஸ் கூறியுள்ள முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், அணியின் கேப்டன் தோனி பேட்டிங் வரிசையில் சற்று முன்கூட்டியே களமிறங்க வேண்டும். அப்போதுதான் அவரால் கண்ட்ரோல் செய்ய முடியும். இது போன்ற தொடர்களில் அவர் தன்னை கடைசி 4-5 ஓவர்களில் களமிறங்கினால் தான் சிறப்பாக ஆட முடியும் என நினைத்துக்கொண்டுள்ளார் என நினைக்கிறேன். ஆனால் அவர் குறைந்தபட்சம் 5வது அல்லது 6வது வீரராக களமிறங்க வேண்டும்.

கவாஸ்கர் அட்வைஸ்

கவாஸ்கர் அட்வைஸ்

அதே போல அணியில் இளம் வீரர்களின் பேட்டிங் வரிசை குறித்து சிந்திக்க வேண்டும். உதாரணத்திற்கு சர்வதேச போட்டிகளை கணக்கில் பார்த்தால் சாம் கரண் அனுபவம் குறைந்தவர். அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அவரை 3வது அல்லது 4வது வீரராக களமிறக்கினால் அணியின் ஸ்கோர் வேகமாக உயரும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 11, 2021, 15:10 [IST]
Other articles published on Apr 11, 2021
English summary
Gavaskar advice for Dhoni's batting mistakes against Delhi match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X