For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“முட்டாள்கள்”.. மேக்ஸ்வெல், சாம்பாவை திட்டிய விராட் கோலி.. சின்ன விஷயத்திற்காகவா.. காரணம் என்ன?

சென்னை: ஆர்சிபி வீரர்கள் மேக்ஸ்வெல் மற்றும் ஆடம் சாம்பாவை ஒரு சுவாரஸ்ய விஷயத்திற்காக முட்டாள்கள் என்று திட்டியுள்ளார் வீராட் கோலி

நடப்பாண்டு ஐபிஎல் தொடரை பெங்களூரு அணி முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி வெற்றியுடம் தொடங்கியுள்ளது. 2வது போட்டியில் இன்று ஐதராபாத் அணியுடம் மோதவுள்ளது.

அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன? அவ்ளோ கவனக்குறைவா.. கொல்கத்தா அணி மீது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கடும் அதிருப்தி.. செய்த தவறு என்ன?

இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தின் போது ஆர்சிபி அணியில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு வெளியாகியுள்ளது.

ஏலம் எடுத்த ஆர்சிபி

ஏலம் எடுத்த ஆர்சிபி

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். அவரை அந்த அணி ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. பலரும் மேக்ஸ்வெல் கடந்தாண்டு சொதப்பினார் என்று கூறிய போதும் அந்த அணி அதிக தொகை கொடுத்து எடுத்தது.

அணி தொப்பி

அணி தொப்பி

இந்நிலையில் ஆர்சிபி அணி தன்னை ஏலம் எடுத்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார். அதில், ஐபிஎல் ஏலத்தின் போது நானும், ஆர்சிபி அணியில் ஏற்கனவே இருந்த ஆடம் சாப்பாவும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இருந்தோம். அப்போது நான் ஏலம் எடுக்கப்பட்டேன் என்ற செய்தி வந்ததும் சாம்பா அவரின் பையில் இருந்த ஆர்சிபி தொப்பியை என்னிடம் கொடுத்து அணியில் சேர்த்தார்.

விராட் கோலி

விராட் கோலி

அதோடு நில்லாமல் ஒரு புகைப்படத்தையும் எடுத்த சாம்பா, அதனை ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு அனுப்பி வைத்து, நான் ஏற்கனவே முதல் ஆளாக மேக்ஸ்வெல்லுக்கு தொப்பியை கொடுத்து வரவேற்றுவிட்டேன் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி சிரித்துக்கொண்டே 'முட்டாள்கள்' நகைச்சுவையாக தெரிவித்தார்.

கோலியின் விருப்பம்

கோலியின் விருப்பம்

மேலும் பெங்களூரு அணியில் இணைவது ஏற்கனவே தெரியும் எனவும் மேக்ஸ்வெல் தெரிவித்தார். அதில் அவர், இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நானும் கோலியும் மெசேஜ் செய்துகொண்டோம். அப்போது கோலி என்னிடம் "நாங்கள் உங்களை அணியில் சேர்க்க ஆசைப்படுகிறோம். இருந்தாலும் ஏலம் இருக்கிறது. என்ன ஆகிறது என பார்ப்போம் என்றார் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, April 14, 2021, 17:44 [IST]
Other articles published on Apr 14, 2021
English summary
Glenn Maxwell reveals the Interesting incident that happened when he was picked by RCB
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X