For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"மும்பைய விடுங்கப்பா".. ஆர்சிபிக்கு இருக்கும் மெகா வாய்ப்பு.. சிஎஸ்கே 3வது இடத்திற்கு செல்கிறதா?

அமீரகம்: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ஆர்சிபி அணி 2வது இடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் இன்றும் உள்ளது.

அமீரகத்தில் நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது. இன்றுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்து ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது.

T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை! T20 World Cup: 3 முக்கிய முடிவுகள் தயார்.. பொறுமை இழந்த பிசிசிஐ.. அவசர அவசரமாக நடந்த ஆலோசனை!

இந்த சீசனில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் 4வது இடத்திற்காக மோதி வருகின்றன.

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

ஐபிஎல் புள்ளிப்பட்டியல்

4வது இடத்திற்கான போட்டி ஒருபுறம் நீடித்து வரும் நிலையில் மற்றொரு புறம் 2வது இடத்திற்காக சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. 14 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி 18 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் +0.455 என உள்ளது. இதே போல ஆர்சிபி அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த அணியின் ரன் ரேட் -0.159 ஆக உள்ளது. ஆர்சிபிக்கு இன்னும் ஒரு போட்டி மீதம் இருப்பதால் 2வது இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல.

என்ன பலன் கிடைக்கும்

என்ன பலன் கிடைக்கும்

ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் விதிகளின் படி, முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் ஒன்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனினும் தோல்வி பெறும் அணி வெளியேறாது. 2வதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதாவது 3வது மற்றும் 4வது இடத்தை பிடிக்கும் அணிகள் குவாலிஃபையர் 2 போட்டியில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி முதல் குவாலிஃபையரில் தோல்வியடைந்த அணியுடன் மோதும். அதில் வெற்றி பெறும் அணி தான் இறுதிப்போட்டிக்கு செல்லும். எனவே 2 குவாலிஃபையர் வாய்ப்புகளை பெறுவதற்காக ஆர்சிபி இன்றைய போட்டியில் முணைப்பு காட்டும்.

 என்ன செய்ய வேண்டும்

என்ன செய்ய வேண்டும்

ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் கடைசி லீக் ஆட்டம் இன்று இரவு மோதுகிறது. இதில் டாஸ் வென்று ஆர்சிபி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அப்போது குறைந்தது 200 ரன்கள் இலக்காக நிர்ணயித்து, அதில் 163 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்துவிட்டால் ஆர்சிபி 2வது இடத்திற்கும், சிஎஸ்கே 3வது இடத்திற்கும் செல்லும். ஆனால் இது நடைபெறுவது மிகவும் கடினமான ஒன்றாகும்.

ஆர்சிபிக்கு இருக்கும் சிக்கல்

ஆர்சிபிக்கு இருக்கும் சிக்கல்

ஆர்சிபி அணி ஒருவேளை இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெறாவிட்டல், ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா அணியுடன் மோதுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது. கொல்கத்தா அணி ஏற்கனவே அசுரத்தனமான ஃபார்மில் உள்ளது. மும்பை, சிஎஸ்கே என பலமான அணிகளையே வீழ்த்தியுள்ளது. எனவே கொல்கத்தாவை எதிர்கொண்டு வெற்றி பெறுவது என்பது கடினமான விஷயமாக மாறிவிடும்.

Story first published: Friday, October 8, 2021, 15:32 [IST]
Other articles published on Oct 8, 2021
English summary
How RCB Can Overtake CSK On Points Table in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X