For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோட் 54.. மேட்சுக்கு நடுவே பறந்த "ரகசிய குறியீடு".. ஐபிஎல்லில் நேற்று நடந்த சம்பவம்.. ஷாக் பின்னணி!

சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி ரகசிய குறியீடுகளை பயன்படுத்தியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

Recommended Video

IPL 2021: KKR uses secret code for PBKS match | OneIndia Tamil

நேற்று கொல்கத்தாவிற்கும் பஞ்சாப்பிற்கும் இடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய பஞ்சாப் 9 விக்கெட்டை இழந்து 20 ஓவருக்கு வெறும் 123 ரன்கள் மட்டுமே எடுத்தது.

போச்சு இனி எல்லாம் போச்சு.. 2 அணிகளுக்கு பெரும் இடி.. மேலும் 2 முக்கிய வீரர்கள் வெளியேற திட்டம்..! போச்சு இனி எல்லாம் போச்சு.. 2 அணிகளுக்கு பெரும் இடி.. மேலும் 2 முக்கிய வீரர்கள் வெளியேற திட்டம்..!

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 16.4 ஓவரில் 126 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கொல்கத்தா அணி இந்த போட்டி மூலம் கம்பேக் கொடுத்துள்ளது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா சிறப்பான வியூகங்களை வகுத்தது. முக்கியமாக பவுலிங் ரொட்டேஷன் சிறப்பாக இருந்தது. பீல்டிங் நிற்க வைத்த விதமும் சிறப்பாகவே இருந்தது.

பவுலிங் ரொட்டேஷன்

பவுலிங் ரொட்டேஷன்

கொல்கத்தா அணி நேற்று சிறப்பாக திட்டங்களை வகுக்க அந்த அணி பயன்படுத்திய ரகசிய குறியீடுதான் காரணம் என்று தகவல்கள் வந்துள்ளன. அதன்படி கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் குழு ரகசிய குறியீடுகள் மூலம் மைதானத்தில் இருக்கும் வீரர்களுக்கு தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

ரகசியம்

ரகசியம்

நேற்று ஆட்டத்தின் போது கொல்கத்தா பவுலிங் செய்த போது, கொல்கத்தா அணியின் பெவிலியனில் 54 என்ற எண் இருந்தது. பெரிய போர்ட் ஒன்றில் 54 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மைதானத்தில் இருக்கும் கொல்கத்தா வீரர்கள் எளிதாக பார்க்கும் வகையில் போர்ட் வைக்கப்பட்டு இருந்தது. 54 என்பது அணியின் பயிற்சியாளர் குழு அனுப்பிய கோட் வேர்ட்ஸ் ஆகும்.

ஏன்

ஏன்

இப்படித்தான் பீல்டிங் நிற்க வைக்க வேண்டும், இவர்தான் ஓவர் போட வேண்டும் என்று பயிற்சியாளர் குழு கொடுத்த கோட் வேர்ட்ஸ் ஆகும் இது. கொல்கத்தா பயிற்சியாளர் குழு அணியில் இருக்கும் வீரர்களை வழி நடத்தும் விதமாக இப்படி செய்தது. கொல்கத்தா அணிக்கு இது பெரிதும் உதவியாக இருந்தது.

விமர்சனம்

விமர்சனம்

நேற்று போட்டியில் அந்த அணி வெல்லவும் இதுவே காரணமாக இருந்தது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் இந்த செயல்பாடு பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. ஆட்டத்தின் போது இப்படி ரகசிய குறியீடுகளை பயன்படுத்துவது தவறு என்று விமர்சனம் செய்துள்ளனர்.

Story first published: Tuesday, April 27, 2021, 14:56 [IST]
Other articles published on Apr 27, 2021
English summary
IPL 2021: Kolkata uses code words for planning against Punjab during the match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X