இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை.. அதிர்ச்சியில் ரோஹித் சர்மா.. ஐபிஎல்லில் புதிய டிவிஸ்ட்!

மும்பை: ஐபிஎல் போட்டிகள் மும்பை நடப்பது சந்தேகமாக இருப்பதால் ரோஹித் சர்மா அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

2020 ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது மும்பை அணி. இந்த நிலையில் இதே வேகத்தோடு 2021 ஐபிஎல் தொடருக்கும் மும்பை அணி தயாராகி வருகிறது.

திருப்பம்.. பிட்ச் மீது புகார் வைக்காமல் பின்வாங்கும் இங்கிலாந்து அணி.. என்ன நடந்தது?- பின்னணி

ஏலத்தில் ஒரு சில வீரர்களை எடுத்து மும்பை அணி தங்களை மேலும் வலிமைப்படுத்தி உள்ளது. மும்பை வீரர்களும் தற்போது முதல் தரப்போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார்கள்.

மும்பை

மும்பை

ஐபிஎல் போட்டிகள் மும்பை நடப்பது சந்தேகமாக இருப்பதால் ரோஹித் சர்மா அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக புனே, மும்பையில் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.

 கொரோனா

கொரோனா

இரண்டாம் அலை ஏற்பட்டுவிட்டது போன்ற அச்சம் இதனால் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளை புனே, மும்பையில் நடத்த வேண்டாம் என்று ஆலோசனைகள் வைக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் நிர்வாகக் குழுவும் இதே யோசனையில்தான் இருக்கிறது.

சிக்கல்

சிக்கல்

இதனால் தற்போது புதிய ஹோம் மைதானத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. அகமதாபாத் அல்லது விதர்பா மைதானங்களை மும்பை அணி தேர்வு செய்யும். மும்பை பிட்ச்தான் இத்தனை வருடங்கள் அந்த அணிக்கு பெரிய பலமாக இருந்தது.

ஆனால் நடக்காது

ஆனால் நடக்காது

ஆனால் இந்த வருடம் அங்கு ஐபிஎல் போட்டிகள் நடக்க வாய்ப்பு இல்லை. புனேவிலும் நடக்காது என்பதால் புதிய பிட்சை மைதானத்தை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருக்கிறார். இது கண்டிப்பாக அந்த அணிக்கு பெரிய பின்னடைவை கொடுக்கும் என்கிறார்கள்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Mumbai plans to choose new home ground outside Maharashtra due to rise of Covid 19 cases.
Story first published: Sunday, February 28, 2021, 10:36 [IST]
Other articles published on Feb 28, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X