For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘எல்லால் ஓரமா போங்க’.. நீண்ட நாள் கழித்து வந்த ஸ்பெஷலிஸ்ட் பவுலர்.. ஒரே ஓவரில் அடங்கிய ஆர்சிபி!

சார்ஜா: அதிரடியாக தொடங்கிய ஆர்சிபி அணி ஒரே ஒரு ஓவரில் பொட்டிப்பாம்பாய் அடங்கியது.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் விராட் கோலியின் ஆர்சிபி மற்றும் கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 2வதாக பேட்டிங் செய்யும் அணியே சார்ஜாவில் அதிகம் வென்ற ரெக்கார்ட் இருந்த போதும் கோலியின் முடிவு ஆச்சரியமளித்தது.

 முதல் 3 ஓவர் அமைதி.. பிறகு புயலாய் மாறிய சிஎஸ்கே.. மிரண்டு போய் அப்படியே நின்ற ரஷீத் கான் முதல் 3 ஓவர் அமைதி.. பிறகு புயலாய் மாறிய சிஎஸ்கே.. மிரண்டு போய் அப்படியே நின்ற ரஷீத் கான்

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

அதற்கேற்றார் போலவே ஆர்சிபி அணியின் தொடக்கமும் அதிரடியாக இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இவர்கள் இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவின் முடிவில் அந்த அணி 55 ரன்களை குவித்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைவலி ஏற்பட்டது.

சிறந்த பார்ட்னர்ஷிப்

சிறந்த பார்ட்னர்ஷிப்

குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல் யாராலும் தடுக்க முடியாதவாறு ருத்ரதாண்டவம் ஆடினார். 8வது ஓவரில் கேட்ச் அவுட் ஆன போதும், அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதனால் ஸ்கோர் எகிறப்போகிறது என அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு எமனாக களமிறங்கினார் மொய்சஸ் ஹென்ரிக்யூஸ். அவர் வீச வந்த முதல் ஓவரிலேயே விராட் கோலி போல்ட் அவுட்டானார். 24 பந்துகளை சந்தித்திருந்த கோலி 25 ரன்களை சேர்த்திருந்தார்.

Recommended Video

CSK thrash SRH by 6 wickets, become 1st team to reach playoffs | Oneindia Tamil
அடுத்தடுத்து 2 விக்கெட்

அடுத்தடுத்து 2 விக்கெட்

கோலி அவுட்டான அடுத்த பந்திலேயே ஆர்சிபிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் விக்கெட்டிற்காக ஆல்ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் களமிறக்கப்பட்டார். இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க முயல, அந்த பந்து லாவகமாக சர்ஃபராஸ் கானின் கையில் சிக்கியது. இதனால் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்கள் சரிந்தன.

3வது விக்கெட்

3வது விக்கெட்

இரு விக்கெட்கள் விழுந்தாலும், மறுமுணையில் அதிரடி குறைக்காமல் இருந்தார் தேவ்தத் பட்டிக்கல். ஆனால் அவரின் கதையையும் ஹென்ரிக்யூஸே முடித்துவைத்தார். 12வது ஓவரில் அவர் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற பட்டிக்கல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 38 பந்துகளை சந்தித்த பட்டிக்கல் 40 ரன்களை விளாசினார்.

நீண்ட நாளுக்கு பிறகு

நீண்ட நாளுக்கு பிறகு

கடந்த சில போட்டிகளாக வெளியில் உட்காரவைக்கப்பட்டிருந்த ஹென்ரிக்யூஸ், முதல் முறையாக இந்த போட்டியில் களமிறக்கப்பட்டார். ஆனால் வந்த முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்த 3 விக்கெட்கள் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை உண்டாக்கியது. ஆனால் டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் காப்பாற்றி வருகின்றனர்.

Story first published: Sunday, October 3, 2021, 17:24 [IST]
Other articles published on Oct 3, 2021
English summary
Punjab kings All rounder Moises henriques Bags three wickets helps to Restrict RCB in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X