ஐபிஎல்-காக புதிய ஜெர்ஸி.. ஆர்சிபி அணி போட்டுள்ள தனி ரூட்.. ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிய வீடியோ!

அகமதாபாத்: கொரோனாவை எதிர்த்து போராடிட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

IPL 2021 RCB reveals New Jersey for KKR match on Monday | Oneindia Tamil

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் பல்வேறு மாநிலங்களில் மக்கள் இன்னமும் சிரமப்பட்டு வருகின்றனர்.

தோனியின் பொறுப்பு இதுதான்.. அவரை நியமித்ததற்கு காரணமும் இதுதான்..வாய்த்திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலிதோனியின் பொறுப்பு இதுதான்.. அவரை நியமித்ததற்கு காரணமும் இதுதான்..வாய்த்திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலி

இதற்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருக்கும் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே நிதியுதவி அளித்தன. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் உதவ முன்வந்துள்ளது.

ஜெர்ஸி நிறம்

ஜெர்ஸி நிறம்

விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் இயற்கையையும், மரங்களையும் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி ஒரே ஒரு போட்டியில் பச்சை நிறத்தினாலான ஜெர்ஸியை அணிந்து விளையாடுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனாவை எதிர்த்து போராடி வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு போட்டியில் நீள நிறத்திலான ஜெர்ஸியை அணிந்து விளையாடவுள்ளதாக அறிவித்துள்ளது.

புதிய முயற்சி

புதிய முயற்சி

14வது ஐபிஎல் தொடர் ஆட்டங்கள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சூழலில் வரும் 19ம் தேதி முதல் அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இதில் வரும் 20ம் தேதியன்று ஆர்சிபி அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அந்த போட்டியில் ஆர்சிபி நீல நிற ஜெர்ஸியை பயன்படுத்தவுள்ளது.

ஜெர்ஸி ஏலம்

ஜெர்ஸி ஏலம்

போட்டி முடிந்த பிறகு ஒவ்வொரு வீரரும் அவர்கள் அணிந்திருந்த ஜெர்ஸியில் கையெழுத்திட்டு அதனை ஏலத்திற்கு விடவுள்ளனர். அதன் மூலம் பணத்தை ஆக்சிஜன் வாங்குவதற்கு நிதியுதவியாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த ஜெர்ஸியின் பின் புறத்தில் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளவும், பாதுகாப்பாக இருங்கள் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதிய வீடியோ

புதிய வீடியோ

இதுகுறித்து ஆர்சிபி வெளியிட்டுள்ள வீடியோவில் அணியின் கேப்டன் விராட் கோலி இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவமனைகளின் மேம்பாட்டிற்காக இந்த தொகை கொடுக்கப்படவுள்ளதாக கூறியுள்ளார், மேலும் அவர் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், வாய்ப்பு இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசியை உடனடியாக போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

தொடரில் முன்னிலை

தொடரில் முன்னிலை

கடந்த முறை ப்ளே ஆஃப் வரை சென்ற ஆர்சிபி அணி இந்த முறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 7 போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. தற்போது அணியில் சில மாற்றங்களையும் செய்துள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
RCB to wear 'blue jersey' to Raise fund for Covid 19 relief in IPL 2021
Story first published: Tuesday, September 14, 2021, 13:24 [IST]
Other articles published on Sep 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X