For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வாழ்வா? சாவா? போட்டியில் இப்படி செய்வதா.. நட்சத்திர வீரர்களை வெளியேற்றிய பஞ்சாப்..ஆர்சிபிக்கு சாதகம்

அமீரகம்: ஆர்சிபி அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.

14வது ஐபிஎல் தொடரின் இறுதிகட்ட ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்காக 4 அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன.

ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடும் போட்டி.. ப்ளே ஆஃப்-க்குள் நுழைய.. ஒவ்வொரு அணியும் என்ன செய்ய வேண்டும்ஒரு இடத்திற்கு 4 அணிகள் கடும் போட்டி.. ப்ளே ஆஃப்-க்குள் நுழைய.. ஒவ்வொரு அணியும் என்ன செய்ய வேண்டும்

இந்த ரேஸில் ஏற்கனவே சிஎஸ்கே மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதிபெற்றுவிட்ட நிலையில் 3வதாக ஆர்சிபி அணி நுழைவதற்கான முக்கிய போட்டி இன்று நடைபெறுகிறது.

பஞ்சாப் - ஆர்சிபி

பஞ்சாப் - ஆர்சிபி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றுள்ள விராட் கோலி தலைமையிலான ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்த அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். எனவே பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக பெரும் பலத்துடன் களமிறங்குகிறது. அணியில் எந்தவித மாற்றமும் இன்றி களமிறங்குகிறது. அணியில் கோலி, மேக்ஸ்வெல், சாஹல் என அனைவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ளதால் வலுவான நிலையில் உள்ளது.

ஆர்சிபி ப்ளேயிங் 11:

ஆர்சிபி ப்ளேயிங் 11:

விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத், க்ளென் மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஜார்ஜ் கார்டன், சபாஷ் அகமது ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், யுவேந்திர சஹால்,

இதே போல பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்காக மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. இந்த அனைத்து அணிகளும் அடுத்து வரும் 2 போட்டிகளும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும். எனவே ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற பஞ்சாப் அணி தீவிரமாக உள்ளது.

Recommended Video

வழியில் நின்ற Mustafizur.. கடுப்பான Du Plessis.. CSK vs RR Match-ல் என்ன நடந்தது ?
பஞ்சாப் பின்னடைவு

பஞ்சாப் பின்னடைவு

ஆனால் அந்த அணி நட்சத்திர வீரர்கள் இன்றி களமிறங்கியுள்ளது. பேட்டிங்கில் நட்சத்திர வீரரான ஃபெபியன் ஆலன் காயத்தினால் வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ப்ரீத் பிரார் விளையாடவுள்ளார். இதே போல அணியை முக்கிய கட்டத்தில் காப்பாற்றி வந்த தீபக் ஹூடாவுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல பந்துவீச்சில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் எல்லீஸுக்கு பதிலாக மொஸஸ் ஹென்ரிக்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப் ப்ளேயிங் 11

பஞ்சாப் ப்ளேயிங் 11

கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், எய்டன் மர்க்ராம், நிகோலஸ் பூரண், சஃப்ராஸ் கான், சாருக்கான், ஹென்ரிக்யூஸ், ஹர்ப்ரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஸ்னாய், அர்ஷ்தீப் சிங்

Story first published: Sunday, October 3, 2021, 16:36 [IST]
Other articles published on Oct 3, 2021
English summary
RCB won the toss against PBKS,full playing 11 details here in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X