“கடைசி வரை நம்பினோம்”.. மீண்டும் ஒரு முறை ஏமாற்றம்.. திடீரென கண்கலங்கிய ரிஷப் பண்ட் - வீடியோ

அமீரகம்: இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத வருத்தத்தில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் மனமுடைந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் நேற்று டெல்லி கேபிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

இதில் முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 135/5 ரன்கள் சேர்த்தது. இதன் பின்னர் விளையாடிய கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

டெல்லி அணியில் தொடக்கம் சற்று அதிரடியாக இருந்தது. ஆனால் கேகேஆர் அணி சுலபமாக சுருட்டியது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவன் 36 (39), ஷ்ரேயஸ் ஐயர் 30 (27) ஆகியோர் ரன்களை சேர்த்தார்கள். எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஓபனர்கள் ஷுப்மன் கில் 46 (46), வெங்கடேஷ் ஐயர் 55 (41) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்ததால் கொல்கத்தா அணி 12 ஓவர்களில் 96/0 என இருந்தது.

சரிந்த கேகேஆர்

சரிந்த கேகேஆர்

இதன்பிறகு நிதிஷ் ராணா 13 (12) வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இறுதியில் தினேஷ் கார்த்திக், இயான் மோர்கன், ஷகிப் அல் ஹசன், சுனில் நரைன் ஆகியோர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர். குறிப்பாக 17வது, 18வது, 19வது ஓவர்களில் டெல்லி அணி மொத்தமாக 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியது.

 த்ரில் வெற்றி

த்ரில் வெற்றி

இதனால் கடைசி ஓவருக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. அஸ்வினின் முதல் 4 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஷகிப் 0 (2), நரைன் 0 (1) ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால், கடைசி 2 பந்துக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் திரிபாதி சிக்ஸர் அடித்து அணிக்கு 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். இதன்மூலம், கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை சிஎஸ்கே, கொல்கத்தா இடையில் இறுதிப் போட்டி நடைபெறும்.

பண்ட் உருக்கம்

பண்ட் உருக்கம்

இந்த முறையும் கடைசி வரை தோல்வியை சந்தித்த ஏக்கத்தில் டெல்லி அணி வீரர்கள் அழுதனர். போட்டி முடிந்த பிறகு பேசிய ரிஷப் பண்ட், இப்போது பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. கடைசிவரை வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பினோம். இறுதிகட்டம் வரை ஆட்டத்தை எங்களுக்கு சாதகமாக நகர்த்தினோம். ஆனால் கடைசியில் நாங்கள் நினைத்ததுபோல் நடக்கவில்லை. மிடில் ஓவர்களின்போது கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இதனால், எங்களால் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய முடியவில்லை.

வெற்றி நம்பிக்கை

வெற்றி நம்பிக்கை

மேலும் பேசிய அவர், டெல்லி கேபிடல்ஸ் என்றாலே பாசிடிவ்தான். நிச்சம் அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுப்போம். நாங்கள் சிறப்பாக விளையாடினோம். வெற்றி, தோல்விகளை சந்தித்துதான் ஆக வேண்டும். நிச்சயம் அடுத்த சீசனில் கம்பேக் கொடுப்போம் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 5 - October 19 2021, 03:30 PM
ஸ்காட்லாந்து
பாபுவா நியூ கினி
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Rishabh pant gives an emotional explanation for DC loss against KKR in IPL 2021
Story first published: Thursday, October 14, 2021, 10:15 [IST]
Other articles published on Oct 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X