For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிவந்துப்போன கோலியின் கண்கள்.. பஞ்சு பஞ்சாய் பறந்த பஞ்சாப்..ப்ளே ஆஃப்-க்கு கெத்தாக நுழைந்தது ஆர்சிபி

சார்ஜா: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் ஆட்டத்தில் விராட் கோலியின் ஆர்சிபி மற்றும் கே.எல்.ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 164/7 ரன்கள் குவித்தது.

 வச்சு செய்த பஞ்சாப் ஓப்பனர்ஸ்; கோலி கண்களில் இரத்தக் கண்ணீர் - அடுத்த சில நிமிடத்தில் மாறிய மேட்ச் வச்சு செய்த பஞ்சாப் ஓப்பனர்ஸ்; கோலி கண்களில் இரத்தக் கண்ணீர் - அடுத்த சில நிமிடத்தில் மாறிய மேட்ச்

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியின் தொடக்கமே அதிரடியாக இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இதனால் முதல் விக்கெட்டிற்கு அந்த அணி 68 ரன்களை சேர்த்தது. ஆனால் நீண்ட நேரம் ஆர்சிபியின் அதிரடி நீடிக்கவில்லை. கோலி 25 ரன்கள், பட்டிகல் 40, டேன் கிறிஸ்டியன் 0 என அடுத்தடுத்து வெளியேறினர்.

 மேக்ஸ்வெல்லின் அதிரடி

மேக்ஸ்வெல்லின் அதிரடி

இதன் பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடினர். 33 பந்துகளை சந்தித்த மேக்ஸ்வெல் 4 சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் விளாசினார். டிவில்லியர்ஸ் 18 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார். பின்னர் வந்த சபாஷ் அகமது 8 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களும், ஹென்ரிக்யூஸ் 3 விக்கெட்களும் சாய்த்தனர்.

பஞ்சாப் அணி

பஞ்சாப் அணி

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்கம் முதலே மிரட்டியது. கேப்டன் கே.எல்.ராகுல் 39 ரன்களும், மயங்க் அகர்வால் 57 ரன்களும் விளாச அந்த அணி முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் சேர்த்தது. ஆனால் அதற்கு அடுத்த வீரர்கள் யாருமே நிலைத்து நின்று விளையாடவில்லை.

ப்ளே ஆஃப் வாய்ப்பு

ப்ளே ஆஃப் வாய்ப்பு

நிகோலஸ் பூரண் (3), மார்க்ரம் (20), சர்ஃபராஸ் கான் (0), ஷாருக்கான் (16) என அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் பஞ்சாப் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. மேலும் 3வது அணியாக ப்ளே ஆஃப்-க்கும் சென்றது.

Story first published: Sunday, October 3, 2021, 20:02 [IST]
Other articles published on Oct 3, 2021
English summary
Royal Challengers bangalore beat Punjab by 6 runs, entered into playoffs in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X