For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜடேஜா இடத்திற்கு செக்.. கோலி ஸ்கெட்ச் போட்ட புதிய நம்பிக்கை நட்சத்திரம்.. ஒரே ஓவரில் மாறிய வாழ்க்கை!

சென்னை: பெங்களூர் அணியில் ஆடி வரும் சபாஸ் அகமது இந்திய அணியில் விரைவில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று பெங்களூர் அணி திரில் வெற்றிபெற்றது. வெற்றிபெற வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்ட போட்டியில் சிறப்பான பவுலிங் மூலம் பெங்களூர் அணி கம்பேக் கொடுத்து வெற்றிபெற்றது.

இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல! இந்த ஒரு அரைசதத்துக்காக 5 வருஷம் காத்திருக்க வச்சுட்டீங்களே மேக்ஸ்வெல்... ஆர்சிபி நம்பிக்கை வீணாகல!

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் முதலில் பேட்டிங் இறங்கிய பெங்களூர் 20 ஓவருக்கு 8 விக்கெட்டை இழந்து 149 எடுத்தது. இதையடுத்து ஹைதராபாத் 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 143 ரன்கள் எடுத்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

எப்படி

எப்படி

இந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் இளம் இடதுகை ஸ்பின் பவுலர் சபாஸ் அகமது முக்கியமான காரணமாக இருந்தார். நேற்று இரண்டு ஓவர் மட்டுமே வீசிய சபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதிலும் ஒரே ஓவரில் இவர் 3 விக்கெட் எடுத்தார்.

சிறப்பு

சிறப்பு

இவர் வீசியது 17வது ஓவரில் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே, சமத் ஆகிய மூன்று பேரை அவுட் செய்தார். அந்த ஓவர்தான் பெங்களூர் அணிக்கு பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அதுவரை ஹைதராபாத் வசம் இருந்த போட்டியை திருப்பி கொண்டு வந்தது சபாஸ் அகமதுதான்.

வாவ்

வாவ்

இடதுகை ஸ்பின் பவுலரான இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். கடந்த மூன்று வருடங்களாக முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் பவுலிங் மட்டும் இல்லாமல் டாப் ஆர்டரில் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர். நேற்று பெங்களூர் அணிக்கு இவர்தான் ஒன் டவுன் இறங்கினார்.

ஜடேஜா

ஜடேஜா

பேட்டிங், இடது கை ஸ்பின் என்பதால் கண்டிப்பாக வரும் நாட்களில் இவர் ஜடேஜாவிற்கு இந்திய அணியில் மாற்றாக இருப்பார். ஜடேஜா ஸ்டைல் பவுலிங் இவரிடம் உள்ளது. இன்னொரு பக்கம் பேட்டிங்கும் செய்கிறார். ஜடேஜாவிற்கு இந்த டி 20 உலகக் கோப்பைக்கு பின் பெரிதாக வாய்ப்பு கிடைக்காது.

வாய்ப்பு

வாய்ப்பு

ஜடேஜாவிற்கு மாற்றாக ஒரு வீரரை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும். 26 வயதே ஆன சபாஸ் அகமது ஜடேஜாவிற்கு நல்ல மாற்றாக எதிர்காலத்தில் இருப்பார். இரண்டு மூன்று வருடங்களில் இந்திய அணியில் கோலியின் கண்டுபிடிப்பான சபாஸ் அகமது கண்டிப்பாக கோலோச்ச வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

Story first published: Thursday, April 15, 2021, 17:52 [IST]
Other articles published on Apr 15, 2021
English summary
IPL 2021: Shabaz Ahmed will be the better find to replace Jadeja in future
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X