For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘ரணகளத்திலும் கிளுகிளுப்பு’ கிட்சனில் வார்னர் - வில்லி செய்த சேட்டைகள்.. வெற்றியாளர் யார்?- வீடியோ

ஐதராபாத்: ஐபிஎல் தொடருக்கு இடையே ஐதராபாத் அணியில் தனியாக வீரர்களுக்கு இடையே சமையல் போட்டியும் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், மே.4ம் தேதி பாதியில் ஒத்திவைக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ஆப்பு அடித்த அமீரகம்.. ஹோட்டலிலேயே சிக்கிய 233 பேர்.. பிஎஸ்எல் தொடருக்கு சிக்கல்! பாகிஸ்தானுக்கு ஆப்பு அடித்த அமீரகம்.. ஹோட்டலிலேயே சிக்கிய 233 பேர்.. பிஎஸ்எல் தொடருக்கு சிக்கல்!

இதுவரை 29ம் லீக் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் உள்ளன. இவற்றை மீண்டும் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களை ஒவ்வொரு அணியும் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் உற்சாகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகளை மீம்ஸுகள் மூலம் கிண்டலடித்து வருகின்றனர்.

சமையல் போட்டி

சமையல் போட்டி

அந்தவகையில் ஐதராபாத் அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டிருந்ததற்கு இடையே ஐதராபாத் அணியில் வீரர்களுக்கு சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் டேவிட் வார்னர், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், கேதர் ஜாதவ் ஆகியோர் போட்டியிட்டனர்.

வெற்றியாளர் யார்

வெற்றியாளர் யார்

இவர்கள் நான்கு பேரும் இந்திய வகை உணவான தோசையை சுட்டு, அழகாக எடுத்தனர். இந்த போட்டியின் போது வில்லியம்சன் மற்றும் வார்னர் ஆகியோர் ஏராளமான குசும்புத்தனத்தில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது என்ற தகவல் பரவி வந்த நிலையில் இந்த வீடியோ அதற்கு பதில் கொடுத்துள்ளது. இந்த போட்டியின் இறுதியில் அணியின் கேப்டன் வில்லியம்சன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இது குறித்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சொதப்பல்

சொதப்பல்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இந்த சீசனில் மிக மோசமாக விளையாடியுள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 27, 2021, 23:26 [IST]
Other articles published on May 27, 2021
English summary
SRH stars put their Cooking skills to test in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X