For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உங்க ஊருக்கே கிளம்புங்க.. ஆஸி. ஜாம்பவானை புறக்கணிக்கும் ஐபிஎல் அணிகள்.. பரபர தகவல்!

மும்பை : 2021 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் இருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியாக தங்கள் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் 2021 ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டனாகவும் சராசரிக்கும் குறைவாக செயல்பட்டார்.

ரஹானே நீக்கம்

ரஹானே நீக்கம்

அஜின்க்யா ரஹானே 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளே-ஆஃப் வரை எடுத்துச் சென்றார். ஆனால், அவரை அடுத்த ஐபிஎல் தொடரில் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியில் அமர வைக்கப்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி

ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி

2020 ஐபிஎல் தொடருக்கு முன் அதிருப்தியில் இருந்த ரஹானே அணி மாறி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சென்றார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தொடர்ந்தார். ஆனால், அந்த சீசனில் 14 போட்டிகளில் ஆறு வெற்றிகள் மட்டுமே பெற்றது ராஜஸ்தான் அணி.

ஸ்மித் செயல்பாடு

ஸ்மித் செயல்பாடு

ஸ்டீவ் ஸ்மித் 14 போட்டிகளில் 311 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 25.91. ஸ்ட்ரைக் ரேட் 131.22. தொடரின் துவக்கத்தில் அதிரடியாக ஆடிய அவர் இடையே மோசமாக ஆட்டமிழந்து வந்தார். அவர் கேப்டன் என்பதால் அவரை நீக்கவும் முடியவில்லை.

நீக்கம்

நீக்கம்

மேலும், வெளிநாட்டு வீரர் என்பதால் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டும், அவரது பார்மை கருத்தில் கொண்டும் அவரை நீக்க முடிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். சஞ்சு சாம்சன் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் ஏலம்

ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டு அடையாளத்தை அழிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தால் இந்திய ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில், அவரை 2021 ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளும் வாங்க ஆர்வம் காட்டாமல் போகலாம்.

Story first published: Thursday, January 21, 2021, 18:31 [IST]
Other articles published on Jan 21, 2021
English summary
IPL 2021 : Steve Smith could not be bought by any team in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X