இந்திய அணிக்கு இவர்தான் துருப்புசீட்டு.. திரும்பி பார்க்க வைத்த தமிழக வீரர்.. பெரும் நம்பிக்கை!

சென்னை: டெல்லி அணிக்கு எதிராக இன்று தமிழ்நாடு வீரர் வருண் சக்ரவர்த்தி ஆடிய விதம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

உலகக் கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணியில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பின் பவுலரான அக்சர் பட்டேல் நீக்கப்பட்டு அணியில் ஷரத்துல் தாக்கூர் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி! பாண்ட்யாவுக்கு மாற்றாக 3 வீரர்கள்.. முக்கிய முடிவை எடுத்த பிசிசிஐ.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

அக்சர் பட்டேல் ஸ்டான்ட் அப் வீரராக மாற்றப்பட்டுள்ளார். அக்சர் பட்டேல் நீக்கப்பட்டதால் இந்திய அணியின் பிரதான ஸ்பின் பவுலர்களாக வருண் சக்ரவர்த்தி, அஸ்வின், ராகுல் சாகர் ஆகியோர் உருவெடுத்துள்ளனர்.

வருண்

வருண்

இதில் வருண் சக்ரவர்த்திதான் இந்திய அணியின் முதல் நிலை ஸ்பின் பவுலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு ஸ்பின் பவுலர்களை வைத்து இந்திய அணி ஆடும் என்றால் ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஸ்பின் பவுலர்களாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இந்திய அணியின் முக்கியமான துருப்பு சீட்டாக வருண் சக்ரவர்த்தி இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

துருப்பு சீட்டு

துருப்பு சீட்டு

இந்த ஐபிஎல் 2021 தொடர் முழுக்கவே வருண் சக்ரவர்த்தி சிறப்பாக ஆடினார். கொல்கத்தா அணி இந்த தொடரில் பல போட்டிகளில் தொடர்ந்து வெற்றிபெற வருண் சக்ரவர்த்திதான் முக்கியமான காரணமாக இருந்தார். கொல்கத்தா அணியில் தற்போது வருண்தான் கேம் சேஞ்சராக திகழ்ந்து வருகிறார். மிஸ்டரி ஸ்பின் பவுலரான இவர் கணிக்க முடியாத வகையில் பவுலிங் செய்து வருகிறார்.

கணிக்க முடியாது

கணிக்க முடியாது

ஷார்ட் பந்தில் ஸ்பின் செய்வது, கடைசி நேரத்தில் பந்தில் எங்கு திரும்பும் என்று கணிக்க முடியாத அளவிற்கு ஸ்பின் செய்வது என்று இவர் செய்யும் பவுலிங் எதிரணி வீரர்களை திணற வைத்துக்கொண்டு இருக்கிறது. கணிக்கவே முடியாத அளவிற்கு இருப்பதால்தான் இவர் மிஸ்டரி ஸ்பின் பவுலர் என்று அழைக்கப்படுகிறார்.

இன்று விக்கெட்

இன்று விக்கெட்

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டிகளில் பொதுவாக வருண்தான் அதிக விக்கெட்டுகளை எடுப்பார். இன்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் எடுத்தார். தன்னுடைய முதல் பந்திலேயே இவர் ப்ரித்வி ஷா விக்கெட்டை எடுத்தார். இன்று நான்கு ஓவர் வீசியவர் வெறும் 26 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இன்னொரு ஓப்பனிங் வீரராக ஷிகர் தவான் விக்கெட்டையும் இவர்தான் வீழ்த்தினார்.

விக்கெட்

விக்கெட்

ருத்துராஜ், அம்பதி ராயுடு போன்ற சில வீரர்களை தவிர முக்கியமான பல ஜாம்பவான் வீரர்கள் வருண் ஓவரில் இந்த தொடர் முழுக்கவே திணறினார்கள். இதனால் இந்திய அணியில் டி 20 உலகக் கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி மிக முக்கியமான வீரராக உருவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் முக்கியமான ஸ்பின் பவுலராக தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி வலம் வருவார் என்ற நம்பிக்கையை இவரின் பவுலிங் கொடுத்துள்ளது.

காயம்

காயம்

ஆனாலும் இன்னொரு பக்கம் வருண் சக்ரவர்த்தி முட்டியில் அடிபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்பே ஏற்பட்ட காயங்கள் காரணமாக இவர் முட்டி மோசமான நிலையில் இருப்பதாக கொல்கத்தா அணி தெரிவித்துள்ளது. அவர் கடுமையான வலியில் துடித்துக் கொண்டு இருக்கிறார். அவரை மிக மிக கவனமாகவே ஆட வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். காயம் பெரிதாகாத பட்சத்தில் இவர் கண்டிப்பாக இந்திய டி 20 உலகக் கோப்பை அணியில் கலக்குவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 கணிப்புகள்
Match 3 - October 18 2021, 03:30 PM
அயர்லாந்து
Netherlands
Predict Now
For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2021: Varun Chakravarthy will be the trump card for team India in World Cup T20 series.
Story first published: Wednesday, October 13, 2021, 21:36 [IST]
Other articles published on Oct 13, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X