For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

11-வது ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்கியது- 578 பேர் பங்கேற்பு!

ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் பெங்களூருவில் தொடங்குகிறது.

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவுக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் நடைபெறும் ஏலத்தில் 578 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஏப்.7-ந் தேதி முதல் மே 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. பிக்சிங் விவகாரத்தில் 2 ஆண்டுகள் தடைகள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் பங்கேற்கின்றன.

ஏலத்தில் 578 வீரர்கள்

ஏலத்தில் 578 வீரர்கள்

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் விடுதல் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. மொத்தம் 578 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.

இதுவரை 18 வீரர்கள்

இதுவரை 18 வீரர்கள்

ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் இடம்பெறுவர். ஏற்கனவே மொத்தம் 18 வீரர்கள் தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

அஸ்வினுக்கு கடும் போட்டி

அஸ்வினுக்கு கடும் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோணி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்வினை சென்னை அணி அதிக விலைக்கு ஏலம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

182 பேர் ஏலம்

182 பேர் ஏலம்

மேலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், பிராவோ, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து வீரர் காலின் உள்ளிட்டோரையும் ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவக் கூடும். மொத்தம் 578 வீரர்களில் 182 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவர்.

Story first published: Saturday, January 27, 2018, 10:12 [IST]
Other articles published on Jan 27, 2018
English summary
11th edition of the IPL auction will begin today in Bengaluru. 578 players will be a part of the IPL auction.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X